tamilnadu

img

அமெரிக்காவில் 17 அடி நீள பெண் மலைப்பாம்பு அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் தென்பகுதியான ஃப்ளோரிடாவில் 17 அடி நீள பெண் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிக் சைப்ரஸ் நேஷ்னல் பிரிசர்வ்(Big Cypress National Preserve) என்ற விலங்கு பாதுகாப்பகம் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


இந்த மலைப்பாம்பு இதுவரை தெற்கு ஃப்ளோரிடா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மலைப்பாம்புகளிலேயே மிகப்பெரியது என பிக் சைப்ரஸ் நேஷ்னல் பிரிசர்வ் மேற்கொண்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய 64 கிலோ எடை கொண்ட இந்த மலைப்பாம்பு அப்பகுதியில் வாழும் ஆண் மலைப்பாம்பு ஒன்றின் உடலில் இருப்பிடம் காட்டும் கருவியை பொறுத்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெண் பாம்பு 73 வளரும் முட்டைகளுடன் இருப்பதாகவும் பாதுகாப்பக நிறுவனம் தெரிவித்துள்ளது. பர்மேஸ் எனப்படும் இந்தவகை மலைப்பாம்புகள் கடந்த 1980ல் முதல்முறையாக அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.