மூன்றாம் கட்டத் தேர் தல் நடைபெற்ற போது, உத்தரப்பிர தேசத்தில் சம்பல் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் மாநில காவல்துறையினர் புகுந்து, வெறியாட்டம் நடத் திய சம்பவங்கள் வெளிச்சத் திற்கு வந்துள்ளன. குறிப்பாக, முஸ்லிம் வாக்காளர்கள் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பல் நாடாளுமன்ற தொகுதியின் மன்சூர்பூர் கிராம வாக்குச் சாவடியில் காலை 10.30 மணியளவில் திடீ ரென்று 10 கார்களில் வந்த 40க்கும் மேற்பட்ட மாநில காவல்துறையினர், வரிசை யில் நின்றிருந்த முஸ்லிம் வாக் காளர்களிடம் சோதனை என்ற பெயரில் அராஜகம் மேற் கொண்டனர். அவர்களது அடையாள அட்டைகளை யும், பூத் சிலிப்புகளையும் பறித்துக் கொண்டு லத்தி யால் தாக்குதலும் நடத்தினர். இத்தொகுதியில் மே 7 அன்று மூன்றாம் கட்டத் தேர்தலின் போது வாக்குப் பதிவு நடந்தது.
முதலில் தாக்குதலுக்கு உள்ளான 18 வயது இளை ஞர் ஜமால், “2 போலீஸ் அதி காரிகள் எனது ஆதார் அட் டையை பறித்துக் கொண்டார் கள். மூன்றாம் அதிகாரி எனது கன்னத்தில் அறைந்து, எனது கழுத்தை நெரித்தார். வேறு வழியில்லாமல் வாக்குச் சாவ டியை விட்டு, வெளியேறுகி றேன் என்று ஒப்புக் கொள் ளும் வரை கடுமையாக அடித்து உதைத்தார்கள்” என்று ஸ்கிரால் இணைய ஊடக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற தாக்குதல் கள் சம்பல் பகுதியில் அஸ் மௌலி கிராமத்திலும் நடந் துள்ளது.
இந்த கிராமங்கள் முஸ் லிம் மக்கள் அதிகம் வசிப் பவை ஆகும். சம்பல் தொகுதி யில் 2019 தேர்தலில் சமாஜ் வாதி கட்சி வேட்பாளர் சபிக் குர் ரஹ்மான் பாருக் 1.75 லட்சம் வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றார். தற் போதைய தேர்தலில் அவரது பேரன் ஜியாஉர் ரஹ்மான், சமாஜ்வாதி வேட்பாளராக போட்டியிடுகிறார். இத் தொகுதி தொடர்ந்து சமாஜ்வாதி வசம் உள்ள நிலையில், முஸ்லிம் மக்கள்தான் சமாஜ்வாதி கட்சி யின் பாரம்பரிய வாக்காளர் களாக உள்ளனர் என்பதால், அவர்களை குறிவைத்து மாநில பாஜக அரசு, காவல் துறையை ஏவி, வாக்குச்சாவ டிக்கு உள்ளேயே புகுந்து தாக் குதல் நடத்தியுள்ளது. இந்த அராஜகத்தை மோடி ஆதரவு ஊடகங்கள் மூடி மறைத்துள் ளன என்பதும் தெரியவந்துள் ளது.