states

img

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தேதி மாற்றம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 23-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 25-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2023-ஆம் ஆண்டின் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 9-ஆம் அறிவித்தது. அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ஆம் தேதியிலும், மிசோரம் மாநிலத்தின் 40 தொகுதிகளில் நவம்பர் 7-ஆம் தேதியிலும், சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 தொகுதிகளில் நவம்பர் 7 மற்றும் 17-ஆம்  தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், ராஜஸ்தான் மாநிலத்தின் 200 தொகுதிகளில் நவம்பர் 23-ஆம் தேதியிலும் மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் 119 தொகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதியிலும் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்றும், 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 23-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 25-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 23-ஆம் தேதி அதிகளவில் திருமண நிகழ்வுகள் நடக்க இருப்பதால், வாக்குப்பதிவு குறைய வாய்ப்புள்ளது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

;