states

img

ராஜஸ்தானில் கொடூரம்; தலித் நபரை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த 2 பேர் கைது  

ராஜஸ்தானில் தலித் நபரை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.  

ராஜஸ்தான் ருக்காசர் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமுதாய இளைஞர் ராகேஷ் மேக்வால் என்பவர் கடந்த 27 ஆம் தேதி உள்ளூர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில் முன்விரோதம் காரணமாக இரவு நேரத்தில் சிலர் என்னை வீட்டிலிருந்து கடத்தி சென்று வயல் பகுதி அருகே மதுகுடிக்க வற்புறுத்தியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் மதுபாட்டிலில் சிறுநீர் கழித்து அதனை தனது தொண்டைக்குள் வலுக்கட்டாயமாக புகுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.  மேலும் சாதிய அவதூறுகளால் திட்டினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

இந்த புகாரின் அடிப்படையில் உமேஷ் ஜாட் மற்றும் பீர்பால் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட நபரின் உடலில் காயங்கள் இருப்பதால், அவர் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.