மும்பை, ஜன.1- தன்பாலின உறவாளர்கள், திரு நங்கையர் ஆகியோரை உள்ள டக்கிய எல்ஜிபிடி சமூகத்தினர் மீது வெறுப்பை உமிழும் வகையில் பேசிய பாஜக எம்எல்ஏ சுதிர் முங் கந்திவாருக்கு நடிகை சோனம் கபூர் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவையில் கொண்டுவரப் பட்டுள்ள மகாராஷ்டிரா பொது பல்க லைக்கழக சட்டம் - 2016 (3வது திருத்தம்) மசோதா குறித்து, மகா ராஷ்டிரா பாஜக எம்எல்ஏ சுதிர் முங் கந்திவார் உரையாற்றியுள்ளார்.
அப்போது, ‘பல்கலைக்கழக வாரிய உறுப்பினர்கள் பதவியில் லெஸ்பியன்கள், தன்பாலின உற வாளர்கள், இருபாலின உறவா ளர்கள், திருநங்கையர் போன் றோரை (Lesbian, gay, bisexual, and transgender) உள்ளடக்கிய எல்ஜிபிடி (LGBT) சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் தருவதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். “இவர்களுக்கு, சமூகத்தில் சம வாய்ப்பை எப்படி அளிக்க முடியும்? எல்ஜிபிடி யினரின் பாலியல் உறவுகள் குறித்து யாரும் இன்னும் வரையறுக்க வில்லை. ஒரு நபர் ஒரு விலங்குடன் பாலியல் உறவு வைத்திருந்தால், அந்த விலங்கு தன்னுடன் அவர் பாலி யல் உறவு வைத்திருந்தார் என்று சான்றளிக்குமா?
அவையில் என்ன நடக்கிறது என்பது புரியவில்லை..” என்று பேசியுள்ளார். இதுகுறித்து, கூட்டு சட்டமன்ற மருத்துவக்குழு அமைத்து ஆலோசிக்க வேண்டும் என்றும் கொச்சைப்படுத்தியுள்ளார். இதையடுத்து, எல்ஜிபிடி சமூ கத்தினரின் உணர்வுகளை, அவர் களின் பிரச்சனைகளை உணராமல் அவர்கள் மீது வெறுப்பை உமிழும் வகையிலும், அவமதிக்கும் வகை யிலும் பாஜக எம்எல்ஏ சுதிர் முங்கந்திவார் பேசியிருப்பதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. பாலி வுட் திரைக்கலைஞர் சோனம் கபூரும் தற்போது சுதிர் முங்கந்திவாரின் பேச்சைக் கண்டித்துள்ளார். “அறி யாமை கொண்டவர், படிப்பறிவு இல்லாதவர்... புண்படுத்தும் வகை யில் கருத்து கூறியுள்ளார்” என்று சோனம் கபூர் சாடியுள்ளார்.