states

img

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் - 1 மணி நிலவரம்

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 32.18% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மகாராஷ்டிராவின் 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில், 363 பெண்கள் உட்பட 4,136 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மகாராஷ்டிராவில் சுமார் 9.7 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4.97 கோடி ஆண் வாக்காளர்களும், 4.66 கோடி பெண் வாக்காளர்களும் அடங்குவர். 20.93 லட்சம் பேர் முதல் முறையாக வாக்காளிக்கின்றனர்.
இந்த நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் 32.18% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கட்சிரோலி மாவட்டத்தில் 50.89% வாக்குகளும், அஹெரியில் 52.84% வாக்குகள் பதிவு. மும்பையில் 27.73% வாக்குகளும், புனேவில் 29.03% வாக்குகளும், நாசிக்கில் 32.30 % வாக்குகள் பதிவாகியுள்ளன.