states

img

ஜான்சன் அண்டு ஜான்சன் பவுடர் உரிமம் ரத்து

மகாராஷ்டிராவில் ஜான்சன் அண்டு ஜான்சன் குழந்தைகள் பவுடரக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையின் முலுண்டில் உள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் நடைபெற்று வருகிறது. 
கடந்த சில வருடங்களாக ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடரை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் புனே மற்றும் நாசிக் நகரில் எடுக்கப்பட்ட ஜான்சன் பேபி பவுடரின் மாதிரிகள் தரமானதாக இல்லை என அரசால் அறிவிக்கப்பட்டது இதையடுத்து  ஜான்சன் பேபி பவுடரின் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்து மராட்டிய உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. 
பேபி பவுடர் தயாரிப்பாளரான ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பவுடர் தயாரிப்பதை 2023 முதல் நிறுத்துவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியது. 
இந்த நிலையில், பவுடரின் மாதிரிகள் தரமானதாக இல்லை என மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையை இந்நிறுவனம் ஏற்கவில்லை. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் கனடாவில் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடர் தயாரிப்பை நிறுத்திவிட்டது. 

;