states

img

கொரோனா இரண்டாம் அலை ஓய்வதாக நினைத்தால் அது பெரும் தவறு... மருத்துவ நிபுணர்கள்....

 பெங்களூரு:
கொரோனா பரவல் குறையலாம், நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையலாம். ஆனால், இரண்டாம் அலை ஓய்ந்து வருவதாக நினைத்தால் அது மிகப்பெரிய தவறு என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா உறுதியாகும் விகிதம் ஐந்து சதவீதத்திற்குக் கீழும், கொரோனாவிற்கு பலியாகும் விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகப் பதிவானால்தான் தொற்றுப் பரவல் குறைந்து வருவதாக அர்த்தமாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.இது அடுத்த இரண்டு வாரங்களில்தான் தெரிய வரும். தற்போது இந்தியாவில் பரவி வரும் வீரியமிக்க டெல்டா வைரசின் தீவிரம் குறையவும் இல்லை. அது இப்போதும் பரவிதான் வருகிறது என்கிறார்கள்.கர்நாடக மாநிலத்தின் கொரோனா நிபுணர் குழுவின் உறுப்பினர் மருத்துவர் வி. ரவி கூறுகையில், கொரோனாவின் வீரியமிக்க டெல்டா என்று பெயரிடப்பட்டிருக்கும் வைரஸ் தற்போதும் பரவி வருகிறது. ஒரு வேளை தளர்வுகள் காரணமாக மக்கள் வெளியே வந்து, கட்டுப்பாடுகளை மீறினால் மீண்டும் தொற்றுபாதிப்பு அதிகரிக்கும். ஊரடங்கு காரணமாகவே பாதிப்பு குறைவாக உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மீண்டும் தொற்று அதிகரிக்கும். தொற்றின் பரவும் வீரியம் குறைந்துவிட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூரு இந்திய பொதுச் சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் கிரிதர் பாபு கூறுகையில், “மாறுபாடுகள் தொடர்ந்து இருக்கும். அதனால் வைரஸ் குறைந்துவிட்டது என்று கூற முடியாது.தொற்றுநோய்களின் அதிகரிப்பு ஒரு குறிப்பிட்டகாலத்திற்குப் பிறகு குறையும். இது நிலைமை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதையும், மக்களின் நடத்தையையும் பொறுத்தது” என்றார்மேலும் அவர் கூறுகையில், “ தொற்றுப் பரவலின் வீரியம் குறைந்து வருவதை எப்போதுஉணரலாம் என்றால், அதிக அளவில் பரிசோதனை செய்யப்பட்டு ஐந்து சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்படும் போது தான். கர்நாடகத்தில் பரவல்8.81 சதவீதமாக உள்ளது. பலி விகிதமும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்” என்றார்.

;