states

img

கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ துவங்கியது... ‘எஸ்மா’ சட்டம் பாயுமென எடியூரப்பா மிரட்டல்..

பெங்களூரு:
கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமையன்று துவங்கியது. இதனால் மாநிலத்தில் பேருந்துப் போக்குவரத்து முடங்கி, இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

அரசுப் போக்குவரத்து ஊழியர்கள், தங்களுக்கு 6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்கவேண்டும், தங்களை அரசு ஊழியர் களாக கருத வேண்டும் என்பன உள்பட10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றவலியுறுத்தி, கடந்த 2020 டிசம்பரில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘அரசு ஊழியர்’ கோரிக்கையை தவிர மற்ற 9 கோரிக்கைகளை 3 மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக கர்நாடக அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தது. தொழிலாளர்
களும் வேலை நிறுத்தப் போராட்டத் தைத் திரும்பப் பெற்றனர். ஆனால்,கடந்த 4 மாதங்களில் தங்களின் கோரிக் கைகளை நிறைவேற்றுவதற்கான எந்தநடவடிக்கையையும் எடியூரப்பா அரசுமேற்கொள்ளாததால், ஏப்ரல் 7 முதல்மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் துவங்கியுள்ளனர்.இந்நிலையில், வேலைநிறுத்தத் தைக் கைவிடா விட்டால், ‘எஸ்மா’ சட்டத்தைப் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று அரசுப் போக்குவரத்துஊழியர்களுக்கு, கர்நாடக பாஜக அர
சின் முதல்வர் எடியூரப்பா மிரட்டல் விடுத்துள்ளார்.

;