states

img

குடியரசு தின அணிவகுப்பு உறுதியாக நடத்தப்படும் - விவசாய சங்கங்களின் முன்னணி அறிவிப்பு

 

விவசாயிகளின் அணிவகுப்பில் இடம் பெறும் டிராக்டர்கள் அனைத்தும் தேசியக் கொடியை ஏந்தி வரும் என்றும் தலைவர்கள் தெரிவித்தார்கள்.

இதேபோன்று டிராக்டர்கள் அணிவகுப்பு நாட்டின் அனைத்து மாவட்ட, மாநிலத் தலைநகர்களிலும் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

விவசாயிகளின் அவலநிலையை உயர்த்திப்பிடித்திடவே இந்த அணிவகுப்பு நடத்தப்படுவதாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா கூறினார்.

தில்லியில் விவசாயிகள் திரண்டு கொண்டிருக்கின்றனர்

குடியுரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக,  பஞ்சாப், ஹர்யானா, மேற்கு உத்தரப்பிரதேசம் முதலிய இடங்களிலிருந்து தில்லியில் எல்லையில் திரண்டு கொண்டிருக்கிறார்கள்.  

உத்தர்காண்ட் மற்றும் சம்பல் மாவட்டத்திலிருந்து வந்த விவசாயிகள் காசிபூர் எல்லையில் திண்டனர்.

“கடந்த 53 நாட்களாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தக் காலத்தில் 73 விவசாயிகள் இறந்துள்ளார்கள். அரசுடன் நடத்தப்பட்ட ஒன்பதாவது சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் உருப்படியாக எதுவும் முன்னேற்றமில்லை. எங்களின் இருப்பை அரசாங்கம் உணர வேண்டும் என்பதற்காகவே டிராக்டர் அணிவகுப்பு நடத்துகிறோம்,” என்று ரமேஷ் சிங் என்னும் விவசாயி கூறினார்.

“வேளாண் சட்டங்களை ரத்து செய்திடாமல் நாங்கள் தில்லியைவிட்டுத் திரும்பப் போவதில்லை” என்றும் விவசாயிகள் தெரிவித்தார்கள்.

“தில்லி வாழ் மக்கள் எங்களுக்கு அளிக்கும் ஆதரவு எங்களால் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு  நெஞ்சை நெகிழ வைக்கிறது. எங்களை ஒழுங்குபடுத்துவதற்காக இறக்கிவிடப்பட்டுள்ள துணை ராணுவப் படையினரும் எங்களுடன் நட்புடன் நடந்துகொள்கிறார்கள்,” என்று அவர்கள்  மேலும் தெரிவித்தார்கள்.

 

;