states

img

10 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புக புதுவை அரசுக்கு வாலிபர் சங்க பிரதேச மாநாடு கோரிக்கை

புதுச்சேரி, ஆக. 12- புதுச்சேரி மாநில அரசு துறை களில் உள்ள 10 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச மாநாடு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு முல்லைநகரில் வெள்ளி யன்று (ஆக. 12) நடைபெற்றது. தலை வர் பாஸ்கர் தலைமை தாங்கினார். ரஞ்சித் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். லீலாவதி வரவேற்றார். தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ்.பாலா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் ஆனந்து வேலை அறிக்கையையும், பொருளாளர் சஞ்சய் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழ் மாநில இணைச் செயலாளர் பாலச்சந்திர போஸ், இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி செய லாளர் பிரவீன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  புதுச்சேரி இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் ஒன்றிய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை வாலிபர் சங்க தலைவர்கள் கண்டித்தனர்.
தீர்மானங்கள்
புதுச்சேரியில் பாரம்பரியமிக்க ஏ.எப்.டி., பாரதி, சுதேசி பஞ்சாலை களை நவீனப்படுத்தி புதிய வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், அரியூர் மற்றும் லிங்கா ரெட்டிபாளையம் சர்க்கரை ஆலையை திறந்து, நவீனப்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் காலி யாக உள்ள 10,000 காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும், மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாநிலத் தலைவராக கவுசி கன், செயலாளராக ஆனந்த், பொரு ளாளராக ரஞ்சித் உட்பட 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

;