states

ரேசன் கடைகளை திறக்கக் கோரி புதுச்சேரியில் பெண்கள் முற்றுகை போராட்டம்

புதுச்சேரி, பிப்.2- புதுச்சேரியில் ரேசன் கடை களை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்கக் கோரி குடிமை பொருள் வழங்கல் அலுவலகத்தை முற்று கையிட்டு அனைத்து பெண்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதிகளில் ரெஸ்டோ பார் மற்றும் மது பான விடுதிகளை திறக்கும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு, பல மாதங்க ளாக மூடப்பட்டுள்ள ரேசன்கடை களை திறந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வலி யுறுத்தி புதுச்சேரியில் தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் தட்டாஞ்சாவடி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் அ.இளவரசி தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன் துவக்கி வைத்து பேசினார். தலைவர் முனி யம்மாள், நிர்வாகிகள் சத்தியா, கலையரசி, உமா, தாட்சாயினி, ஜானகி, இந்திய தேசிய மாதர் சம்மேளன நிர்வாகிகள் தசரதா, அமுதா, ஹேமலதா, அகில இந்திய பெண்கள் முற்போக்கு இயக்கத்தின் தலைவர் விஜயா, சமம் பெண்கள் சுயசார்பு இயக்க நிர்வாகிகள் மாரிமுத்து, சிவகாமி, மற்றும் சரளா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக சாரம் துணை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்த பெண்கள் காவல்துறையின் தடுப்பு வேலிகளை கடந்து அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதிகாரி உறுதி
சம்பவ இடத்திற்கு வந்த குடிமைபொருள் வழங்கல் துறை இயக்குநர் சக்திவேல் சங்க நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ரேசன் கடைகளை திறப்பதற்கான கோப்பு அரசுக்கு அனுப்பட்டுள்ளது என்றும், இன்னும் சில வாரங்க
ளில் அதற்கான நடவடிக்கை கள் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். மேலும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். அதிகாரியின் உறுதியை ஏற்று முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

;