states

img

இலங்கைக்கு 5 லட்சம் நீரிழிவு மாத்திரைகளை வழங்கியது புதுச்சேரி அரசு

புதுச்சேரி, அக். 27- இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மருந்து தட்டுப்பாடு நிலவும் சூழலில், புதுச்சேரி அரசு சார்பில் இலங்கைக்கு 5 லட்சம் நீரிழிவு மாத்திரைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தெ?ண்டைமான் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியை வியாழனன்று (அக். 27) சந்தித்தார். அப்போது பேரவைத் தலை வர் செல்வம், அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகி யோர் உடனிருந்தனர். அப்போது, புதுச்சேரி அரசு சார்பில் இலங்கை வாழ் மக்களுக்கு நீரிழிவு மாத்திரை களை முதல்வர் வழங்கினார். இதுதொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமான் கூறு கையில், புதுச்சேரிக்கும் இலங்கைக்கும் நட்புறவு உண்டு. முதல்வர் ரங்கசாமியை மரி யாதை நிமித்தமாக சந்தித்தேன். பொருளாதார வீழ்ச்சியில் மருந்து தட்டுப்பாடு நிறைய இருப்ப தாக தெரிவித்தேன். இதையடுத்து நீரிழிவு நோயாளி களுக்கு 5 லட்சம் மாத்திரைகளை வழங்கினார். இலங்கை மக்களுக்கு நிறைய உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். புதுச்சேரி அரசுக்கு இலங்கை தமிழர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

;