states

img

மதுபான ஆபாச நடன விடுதிக்கு அனுமதி: சிபிஎம் கடும் கண்டனம்

புதுச்சேரி,டிச.29- புதுச்சேரி முழுவதும் சுற்றுலா வாசிகளுக்காக 300க்கும் மேற்பட்ட ஆபாச மதுபான நடனவிடுதிக்கு கலால்துறை அனுமதி வழங்கி யுள்ளது. நகரப் பகுதிகளில் கோவில், பள்ளிகள் அருகாமையில் இந்தப் ஆபாச நடன விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளதை தடை செய்ய வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.  இலவச அரிசியை வழங்க வேண்டும், 15 மாதங்களுக்கு வழங்க வேண்டிய அரிசிக்கான பணத்தை வழங்க வேண்டும். ரேசன் கடை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 45 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தட்டாஞ்சாவயிலுள்ள குடிமை பொருள் வழங்கல்துறை அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகரச் செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி தலைமை தாங்கினார்.  மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங் கம், மூத்த தலைவர் முருகன்,மாநில செயற்கு செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், கொளஞ்சியப்பன், சீனு வாசன், கலியமூர்த்தி, நகரக்குழுச் செயலாளர் மதிவாணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆனந்த், சஞ்செய் உள்ளிட்ட பலர் பேசினர்.
அதிகாரியிடம் முறையீடு
இந்த போராட்டத்தின் முடிவில், கலால்துறை வட்டாட்சியர் சிலம்பர சனை சந்தித்த தலைவர்கள் குடி யிருப்பு, வீடு, கோவில், பள்ளி கூடங்கள் அருகில் மதுபான ஆபாச நடன விடுதிக்கு எப்படி உரிமம் வழங்கப்பட்டது எனறு கேள்வி எழுப்பி னர். மேலும்,அந்த உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.  முன்னதாக,  கலால்துறையை முற்றுகையிடசென்றபோது தடுப்பு வேளிகளை அமைத்து காவல்துறை யினர் தடுத்து நிறுத்தினர்.