புதுச்சேரி, ஜூலை 30- ஆசிய கண்டத்திலேயே 8 மணி நேர வேலை உரி மையை பெற்றுத் தந்த புதுச்சேரி ஜூலை 30 தியாகி களின் 86 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக் கிழமை நடைபெற்றது. புதுச்சேரி கடலூர் சாலை சுதேசி பஞ்சாலை வளா கத்தில் அமைந்துள்ள தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடை பெற்றது. சிஐடியு பிரதேச செயலாளர் சீனி வாசன் தலைமை தாங்கி னார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், மாநில செயற் குழு உறுப்பினர்கள் பெரு மாள், ராமச்சந்திரன், சிஐ டியு பிரதேச தலை வர் முருகன், நிர்வாகி கள் ராமசாமி, குண சேகரன், பிரபுராஜ், கொளஞ்சியப்பன், மதி வாணன், ரவிச்சந்திரன், கலியமூர்த்தி, ராஜ்குமார் உட்பட திரளான தொழி லாளர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ஏஐடியூசி உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் தியாகிகளின் நினைவு சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. முன்ன தாக மறைமலை அடிகள் சாலையில் இருந்து திரளான தொழிலாளர்கள் ஊர்வலமாக வந்து தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.