states

img

இருளர் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல்: புதுச்சேரி காவலர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,மார்ச் 17- பழங்குடி இருளர் மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய காவலர்களை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த 7 பேரை விசாரணைக்காக காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, கடுமை யாக தாக்கியதுடன் பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த அராஜகத்தை கண்டித்து புதுச்சேரி-வில்லியனூர் புறவழிச் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின மாநிலக் குழு உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார்.  மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் போராட்டத்தை துவக்கி வைத்தார். முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி நிறைவு செய்து பேசினார். மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள்  தமிழ்ச்செல்வன், பிரபுராஜ், சீனிவாசன், சத்தியா இடைக்குழுச் செயலாளர்கள் ராம மூர்த்தி, மதிவாணன்,ராம்ஜி, அன்புமணி, சரவணன் மாநிலக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சங்கர், இளவரசி உட்பட பலர் உரையாற்றினர். இருளர் மக்கள் மீது பதிவு செய்துள்ள பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இருளர் மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறை அதி காரிகள், காவலர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலி யுறுத்தினர்.

;