states

img

பீகாரில் 11 நாட்களில் இடிந்த 5 பாலங்கள் “நல்லாட்சிக்கு” ஆதாரம்

 பதினோரு நாட்களில் 5  பாலங்கள் இடிந்து விழுந்தன. இது தேசிய  ஜனநாயக கூட்டணி அர சாங்கத்தின் “நல்லாட்சி”க்கு சான்றாகும் என ஆர்ஜேடி  தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட் டணி ஆட்சி செய்யும் பீகார்  மாநிலத்தில் பல்வேறு உள்  கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களின் பரிதாபகர மான நிலையை இது வெளிப்  படுத்துகிறது.

ஜூன் 18ஆம் தேதி அராரியாவில் பக்ரா  ஆற்றின் குறுக்கே ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் திறப்பு விழாவுக்  கான ஏற்பாடுகள் நடந்து  வந்த நிலையில் இடிந்து  விழுந்தது. கடந்த 22ஆம் தேதி சிவான் மாவட்டத்தில் கண்டக் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து  விழுந்தது. கடந்த 23ஆம் தேதி கிழக்கு சம்பரண் மாவட் டத்தில் 60 அடி நீள பாலம் இடிந்து விழுந்தது. கடந்த 26ஆம் தேதி கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் எழுபது மீட்டர்  நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்தது.

மதுபானியில் புடாஹி  ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடி  செலவில் கட்டப்பட்டு வந்த 75 மீட்டர் நீள பாலம் கடந்த  ஜூன் 28ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதுகுறித்து ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், “பொது மக்களுக்கு ஆயிரக்கணக் கான கோடி ரூபாய் இழப்பு  ஏற்பட்டுள்ளது. மோடி மற்  றும் நிதீஷ் குமார் தலைமை யிலான ஆறு கட்சி இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் “நல்லாட்சி”க்கு இது சான்றா கும் என்று விமர்சித்துள்ளார்.

;