states

img

ஆயுத பாதுகாப்பு சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென நாகாலாந்து அமைச்சரவை ஒன்றிய அரசுக்கு கடிதம்

நாகாலாந்தில் உள்ள ஆயுத பாதுகாப்பு சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது. 
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் கடந்த சனியன்று பொதுமக்கள்  சென்ற வாகனத்தின் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இதைத்தொடர்ந்து நடந்த வன்முறையில் மேலும் பொதுமக்களில் ஒருவரும் ராணுவம் தரப்பில் ஒருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் நாகாலாந்தில் தவறுதலாக துப்பாக்கி சூடு நடந்து விட்டதாகவும் அரசு வருத்தம் தெரிவிப்பதாகவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா  மக்களவையில் தெரிவித்தார்.  
இச்சம்பவம் குறித்து நாகாலாந்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நெய்பா குரேனு கூறியதாவது,  துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஐ.ஜி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு உள்ளிட்ட  ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் விசாரணை குழுவின் அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல் நாகாலாந்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப் பாதுகாப்பு சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
 

;