states

img

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு நாட்டின் வர்த்தக பற்றாக்குறை வரலாறு காணாத அதிகரிப்பு!

புதுதில்லி, அக்.16- நாட்டின் வர்த்தகப் பற்றாக் குறை, 2021 செப்டம்பரில் முன்  னெப்போதும் இல்லாத அளவிற்கு 1 லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபா யாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு 2012 அக்டோ பரில் 1 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததே அதிபட்ச வர்த்தகப் பற்றாக்குறை என்ற நிலையில், தற்போது அதையும் தாண்டிய வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 2021 செப்டம்பரில், நாட்டின் ஏற்றுமதி 22.63 சதவிகிதம் அதி கரித்து, 2.54 லட்சம் கோடி ரூபா யாக உயர்ந்தது. ஆனால், ஏற்று மதியைக் காட்டிலும் இறக்குமதி யும் இந்தக் காலத்தில் அதிகரித் துள்ளது. 2021 செப்டம்பரில் இறக்குமதி 84.77 சதவிகிதம் அளவுக்கு அதி கரித்து, அதன்மதிப்பு 4 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந் துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் இறக்குமதி, கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அள விற்கு உயர்ந்ததே, இறக்குமதி அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளது. 2021 செப்டம்பரில் தங்கத்தின் இறக்குமதி மட்டும் 38 ஆயிரத்து 325 கோடி ரூபாய் அளவிற்கு அதிக ரித்துள்ளது. இது, 2020 செப்டம்ப ரில் 4 ஆயிரத்து 508 கோடி ரூபாய் என்ற அளவிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு 2021 செப்டம்பரில் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான இந்த வேறுபாடு அதிகரித்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1 லட்சத்து 69 ஆயி ரம் கோடி ரூபாயாக உயர்ந்துள் ளது. இது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பாகும். எனினும் இதனைக் கண்டு பயப் படத் தேவையில்லை என்றும், அடுத்தடுத்த மாதங்களிலும் வர்த்தகப் பற்றாகுறை குறையும் என்றும் இந்திய மதிப்பீட்டு நிறு வனமான இக்ராவின் (ICRA) தலைமை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்திற்கு முன்பாக முன்கூட்டியே பொருட் களை இறக்குமதி செய்தது, கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்கு மதி செய்தது ஆகியவையே வர்த் தகப் பற்றாக்குறையில் எதிரொ லித்து இருப்பதாக அவர் மதிப்பிட் டுள்ளார்.

;