புதுதில்லி, நவ. 29 - நாடு முழுவதும் உள்ள உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதி பதிகளை நியமிப்பதற்கான பரிந்துரை யை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் 4 மூத்த நீதிபதிகள் கொண்ட குழு (கொலீஜியம்) ஒன்றிய அர சுக்கு வழங்குகிறது. இதைப் பரிசீலித்து ஒன்றிய அரசு முறைப்படி உத்தரவு பிறப்பிக்கும். கடந்த 30 ஆண்டுகளுக் கும் மேலாக இந்த நடைமுறை பின் பற்றப்படுகிறது. இதில் ஒன்றிய அரசு தாமதம் ஏற்படுத்தி வந்த நிலையில், “சிபாரிசு செய்தவர்களை நியமிக்குமாறு ‘கொலீ ஜியம்’ மீண்டும் வலியுறுத்தி விட்டால் 3 அல்லது 4 வாரங்களுக்குள் ஒப்புதல் அளித்தாக வேண்டும்” என்று கடந்த 2021 ஏப்ரல் 20-ஆம் தேதி உச்ச நீதி மன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு புதிய உத்தரவு ஒன்றையும் பிறப் பித்தது. ஆனாலும், கடந்த ஆண்டு 11 நீதி பதிகள் நியமனம் தொடர்பாக கொலீஜி யம் வழங்கிய பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதை எதிர்த்து பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை கடந்த நவம்பர் 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், “கொலீஜியம் பரிந்துரைகளுக்கு ஒப்பு தல் அளிக்காமல் ஒன்றிய அரசு தாம திப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறி, இதுதொடர்பாக ஒன்றிய அரசின் சட்ட அமைச்சக செயலர், ஒன் றிய அரசின் நிர்வாகம் மற்றும் நியமனங் கள் துறை கூடுதல் செயலர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு, திங்களன்று (நவம்பர் 28) மீண்டும், நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மற்றும் ஏ.எஸ். ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங் ஆஜராகி, கொலீஜியம் நடைமுறைக்கு எதிரான ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி யிருக்கும் கருத்தை நீதிபதிகளின் கவ னத்துக்கு கொண்டுவந்தார்.
“கொலீஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள், தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக பரிந்துரைக்கின்றனர். இதேபோல், தங்களுக்குத் தெரிந்த நீதிபதிக ளுக்கு பதவி உயர்வு அளிக்க பரிந்து ரைக்கின்றனர். இது அடிப்படையி லேயே குறைபாடு உள்ள நடைமுறை. பதவிக்கு தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே பரிந்துரைகள் இருப்பதில்லை. உலகம் முழுவதும் அரசுதான் நீதிபதிகளை நியமிக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் நீதிபதி களே நீதிபதிகளை நியமித்துக் கொள் கின்றனர். கொலீஜியம் முறைக்கு ஏற்பு டையது அல்ல” என்று அந்தப் பேச்சில் கிரண் ரிஜிஜூ கூறியிருந்தார். இதனைக் கேட்ட நீதிபதி எஸ்.கே. கவுல், ஒன்றிய அரசின் அட்டர்னி ஜென ரல் ஆர். வெங்கடரமணியிடம், “பொது வாக நீதித்துறை தொடர்பாக ஊடகங்க ளில் வெளியாகும் விமர்சன அறிக்கை களை நாங்கள் புறக்கணித்து விடுகி றோம். ஆனால், உயர் பொறுப்பில் இருப்பவர் (சட்ட அமைச்சர்) விமர்சனம் செய்துள்ளார். இது நடந்திருக்கக் கூடாது.
ஒன்றிய அரசு கொண்டுவந்த தேசிய நீதித் துறை நியமன ஆணைய மசோதா நீண்ட காலமாக நிறைவேற்றப் படாமல் உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள ஒன்றிய அரசு கொலீஜி யம் பரிந்துரையை கிடப்பில் வைத்தி ருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால், காலதாமதம் செய்வதற்கு அது ஒரு காரணமாக இருக்கக்கூடாது. உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலீ ஜியம் அளித்த பெயர்களில் சிலவற் றுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கி றது. இதனால், பணிமுதிர்வு அடிபடு கிறது. கொலீஜியம் சிபாரிசு அளித்து விட்டால், அந்த விவகாரம் முடிந்து விட்ட தாக கருத வேண்டுமே தவிர, ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு நீதித் துறை பணிகளை பாதிக்கும் வகையில் செயல்படக்கூடாது.
ஆனால், கொலீஜியம் பரிந்துரை களில் ஒன்றிய அரசு ஏறி உட்கார்ந்துள் ளது. மேலும் கொலீஜியம் அமைப்பை அச்சுறுத்துகிறது. நீதிபதிகள் நியமிக்கப் படாவிட்டால், நாட்டில் நீதி அமைப்பு எவ்வாறு செயல்படும். பல பரிந்துரை கள் கடந்த நான்கு மாதங்களாக நிலு வையில் உள்ளது. சில பெயர்கள் ஒன் றரை ஆண்டாக நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப் பால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளில் ஒருவர் மரணமடைந்து விட்டார். நீதி பதியாக பரிந்துரை செய்யப்பட்ட சில வழக்கறிஞர்கள், தங்கள் சம்மதத்தை விலக்கிக் கொண்டு விட்டனர். கடந்த 2 மாதங்களாக நீதித்துறை பணிகள் அனைத்தும் முடங்கி விட்டன. இது போன்று நீதிபதிகள் நியமனத்தைக் கிடப்பில் போட்டு, ஒன்றிய அரசு எல்லை மீறிச் செல்கிறது. மேலிடத்தில் இருப்ப வர்கள் (ஒன்றிய அரசின் ஆட்சியா ளர்கள்), தாங்கள் நினைப்பதை செய் வோம் என்று நினைத்தால், நாங்க ளும் (உச்சநீதிமன்றம்) நாங்கள் நினைப்பதை செய்வோம். எனவே, நீதித்துறை தனது பங்குக்கு முடிவு எடுக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளி விடாதீர்கள். சட்டத்தை பின்பற்றுங்கள். சட்டங்கள் இருக்கும்வரை அவற்றை பின்பற்றியே ஆக வேண்டும். இங்கு அட்டர்னி ஜெனரலும், சொலிசிட்டர் ஜெனரலும் வந்து இருக்கிறார்கள். அவர்கள் இரட்டைக் குழல் துப்பாக்கி யாக செயல்பட வேண்டும். ஒப்புதல் அளிப்பதற்கு உச்ச நீதிமன்றம் நிர்ண யித்த காலக்கெடுவை பின்பற்றுமாறு ஒன்றிய அரசுக்கு அறிவுரை கூற வேண்டும்.” இவ்வாறு நீதிபதிகள் கடுமையாக கூறியுள்ளனர். மேலும் வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையையும் டிசம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத் துள்ளனர்.