ஐஸ்வால், ஜூலை 25 - மணிப்பூரில், அங்குள்ள பழங்கு டிகளான குக்கி - ஜோ மக்களுக்கு எதிராக, பெரும்பான்மை மெய் டெய் பிரிவினரை பயன்படுத்தி சங்-பரிவாரங்கள் நடத்திவரும் கொலைவெறியாட்டம் வெளிச்சத்தி ற்கு வந்து கொண்டிருக்கும் நிலை யில், அவற்றுக்கு எதிர்வினைகளும் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. மிசோரம் மாநிலத்திலுள்ள மெய் டெய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த ‘மிசோ தேசியவாத முன்னணியைச் சேர்ந்த சரணடைந்த தீவிரவாதிகள் அமைப்பான ‘பாம்ரா’ (PAMRA), இரண்டு நாட்களுக்கு முன்பு அமைதி வழியில் வேண்டுகோள்விடுத்தது. இதையடுத்து, இதனால் மெய்டெய் சமூகத்தினர் மிசோரத்திலிருந்து வெளியேறத்துவங்கினர். மிசோரமின் ஐஸ்வால் நகரிலி ருந்து மணிப்பூரின் இம்பால் நக ருக்கு சனிக்கிழமை அலையன்ஸ் ஏர் விமானம் வந்தது.
அந்த விமான த்தில் பயணித்த 66 பேரில் 56 பேர் மெய்டெய் பிரிவினராக இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பேராசிரியர்கள், மாணவர்கள். பலர் அசாமின் பாரக் பள்ளத்தாக்கு சாலை வழியாகவும் மணிப்பூரை நோக்கி, சாரை சாரையாக பயணத்தைத் துவக் கினர். மிசோரமில் மெய்டெய் சமூ கத்தைச் சேர்ந்த 2,000-க்கும் மேற் பட்டோர் உள்ளனர். அவர்களில் பாதிப் பேர் மணிப்பூரைச் சேர்ந்த வர்கள். எஞ்சியவர்கள் அசாமை சேர் ந்தவர்கள் ஆவார்கள். இதுவரை மிசோரம் மாநிலத்தில் இருந்து 41 பேர் அசாமில் தஞ்சமடைந்துள்ளனர். ‘பாம்ரா’ அமைப்பினரை அழை த்துப் பேச்சு நடத்திய மிசோரம் அரசு, மிசோரத்திலிருந்து மெய்டெய்கள் வெளியேற வேண்டாம் என்றும், அவர்களின் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் அளிப்பதாகவும் கூறியது. இதனிடையே, மிசோரம் பாம்ரா அமைப்பின் நடவடிக்கைக்கு பதிலடி என்ற பெயரில், அசாம் - மணிப் பூர் மாணவர் ஒன்றியம் ஒரு எச்சரி க்கை விடுத்துள்ளது. அதில், மிசோ ரம் மாநிலத்தில் இருந்து வெளியேற்ற ப்படும் மெய்டெய் மக்கள், அசாம் மாநிலத்தில் இருந்து சென்றவர்கள்.
இந்நிலையில், அவர்களை வெளி யேறுமாறு கூறியிருக்கும் நிலை யில், அசாமின் பராக் பள்ளத்தாக்கில் வசிக்கும் மிசோ இன மக்கள் உட னடியாக அசாமை விட்டு வெளி யேறி மிசோரம் செல்ல வேண்டும். மிசோ மக்களின் பாதுகாப்பு கார ணங்களுக்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என அந்த மாண வர் அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது. இந்த மோதல்களுக்கு இடையே, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா வெளியிட்ட ஒரு கருத்து, புதிய விவா தத்தைக் கிளப்பியுள்ளது. அதா வது, மணிப்பூரில் குக்கி பழங்குடி இனக்குழுவினருக்கு தனி நிர்வாக கவுன்சில் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மிசோரம் மாநில அரசு ஆதரிக்கும் என கூறி யுள்ளார். குக்கி பழங்குடிகளும், மிசோ பழங்குடியினரும் தொப்புள் கொடி உறவுகள் என்ற அடிப்படையில் இந்த ஆதரவை அவர் வழங்கியுள்ளார். ஆனால் மணிப்பூரில் குக்கி பழங்குடியினருக்கு தனி நிர்வாக கவுன்சில் உருவாக்கப்பட்டால் அது பின்னர் மிசோரம் மாநில அரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டு அகன்ற மிசோரம் மாநிலமாக உரு வெடுக்கும் நிலைமை உருவாகும் என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.