states

மதுரை மீனாட்சி கோவிலில் ஒப்பந்தப்படியே புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்கப்படுகிறது

மதுரை, ஜூன் 6- ஒப்பந்தம் கோரப்பட்டு அதன்படியே மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் உள்ளே புகைப்  படங்கள் மற்றும் வீடி யோக்கள் எடுக்கப்படுகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மதுரை, புதூர் பகுதியைச் சேர்ந்த  முத்துக்குமார் என்பவர் உயர்  நீதிமன்ற மதுரைக் கிளை யில் தாக்கல் செய்த மனு வில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள சிலை கள் மற்றும் சிற்பங்கள் ஆகி யவற்றை புகைப்படங்கள் எடுக்க அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. ஆனால், அருண் போட்டோகிராபி, ஸ்டாலின் போட்டோகிராபி, ஒன் கிளிப்  போட்டோகிராபி, சீரா போட்டோகிராபி மற்றும் அருவி போட்டோகிராபி ஆகியோர் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள சிற்பங்கள் மற்றும் சிலைகள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மற்றும்  வீடியோ ஆகியவற்றை எடுத்து தங்களின் லோகோ வைத்து பேஸ்புக் வாட்ஸ்  அப் மற்றும் சமூக வலை தளங்களில் பதிவிட்டு வரு கின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி இவர்கள் புகைப்படங்கள்  மற்றும் வீடியோ எடுக்க அனு மதி உள்ளதா என கேட்கப்  பட்ட கேள்விக்கு, மேற்குறிப்  பிட்டுள்ள நபர்களுக்கு அனு மதி இல்லை என பதில் தெரி விக்கப்பட்டுள்ளது. எனவே மீனாட்சி கோவி லில் அனுமதியின்றி எடுக்கப்  பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகளின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகிய வற்றை சமூக வலைதளங்க ளில் இருந்து நீக்கவும், புகைப்படங்கள் மற்றும் வீடி யோக்கள் தனி நபர்கள் எடுக்  காத வண்ணம் பாதுகாப்பை  அதிகப்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந் தார். இந்த மனு மீதான விசா ரணை செவ்வாயன்று நீதிபதி கள் சுப்பிரமணியன், விக் கோரியா கௌரி அமர்வு முன்பு நடைபெற்றது.  மதுரை மீனாட்சி கோவில் நிர்வாகத் தரப்பில்,  மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வ ரர் கோவிலின் உள்ளே புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதற்கு ஒப்  பந்தம் கோரப்பட்டு அதன் படியே புகைப்படங்கள் மற்  றும் வீடியோக்கள் எடுக்கப்  படுகிறது என்று பதிலளிக் கப்பட்டது.  இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்  டனர்.

;