states

img

45 நாள் கெடு விதித்த சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு

புதுதில்லி, மே 31- அமைதியாக போராட்டம் நடத்திய மல்யுத்த  வீரர் - வீராங்கனைகளை கைது செய்ததற்கு சர்வ தேச மல்யுத்த கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலை வரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண்  சிங் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் வன்முறை நிகழ்த்திய விவகாரத்தில், மல்யுத்த முன்னணி வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் இரண்டாம் கட்டமாக தில்லி ஜந்தர் மந்தரில் ஏப்ரல் கடைசி வாரம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சநீதிமன்றத்தின் வற்புறுத்தலால் தில்லி  காவல் துறை பிரிஜ் பூஷண் மீது 2 பிரிவுகளில் (ஒன்று போக்சோ) வழக்குப்பதிவு செய்தாலும், இதுவரை எந்தவித விசாரணையும் நடத்தப்  படவில்லை. போக்சோ வழக்குப்பதிவு செய்  யப்பட்ட நிலையில் அவர் இதுவரை கைது  செய்யப்படவும் இல்லை. இதனால் மல்யுத்த  வீரர் - வீராங்கனைகள் கடந்த ஒரு மாத  காலத்திற்கு மேலாக இடைவிடா போராட்டம் நடத்தி வருகின்றனர். மே 23 அன்று மல்யுத்த மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்திய நிலையில், ஞாயிறன்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாக செல்ல மல்யுத்த வீரர் - வீராங்கனை கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பேரணி செல்ல  தயாராகும் பொழுதே மல்யுத்த வீரர் - வீராங்க னைகளை தில்லி போலீசார் குற்றவாளிகளை போல் இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக கைதுசெய்த சம்பவம், பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. மல்யுத்த வீரர், வீராங்கனை களை கைது செய்ததை சாதகமாக பயன்படுத்தி  போராட்டக்களத்தை தில்லி காவல்துறை அப்புறப்படுத்தியுள்ளது.

கங்கை நதிக்கரையில் பதக்கங்கள்

தொடர்ந்து செவ்வாயன்று (மே 30) 2016  ரியோ ஒலிம்பிக்  போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக்கும், டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவும், உலக சாம்பி யன்ஷிப் தொடரில் பட்டம் வென்ற வினேஷ் போகத்தும் தங்களது பதக்கங்களை கனத்த இதயத்துடன் கதறி அழுதபடி உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீச முயன்றனர். நல்வாய்ப்பாக விவசாய சங்க  தலைவர் நரேஷ் திகாயத், “எங்களுக்கு 5 நாட்கள் அவகாசம் கொடுங்கள், நாங்கள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் மீது நட வடிக்கை எடுக்க முயற்சி செய்கிறோம்” என்று  கூறி வீரர், வீராங்கனைகளின் பதக்கத்தை வெள்ளைத் துணியில் வாங்கிக் கொண்டார்

சர்வதேச மல்யுத்த  கூட்டமைப்பு கண்டனம்

இந்நிலையில், அமைதியாக போராட்டம்  நடத்திய மல்யுத்த வீரர் - வீராங்கனைகளை கைது  செய்ததற்கு சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச மல்யுத்த  கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில மாதங்களாக இந்திய மல்யுத்த  சம்மேளன தலைவரின் அதிகார துஷ்பிரயோ கம் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதி ராக இந்தியாவில் மல்யுத்த வீரர் - வீராங்க னைகள் போராடி வரும் சூழ்நிலையை மிகுந்த கவலையுடன் உலக மல்யுத்த சம்மேளனம் கவனித்து வருகிறது. மல்யுத்த வீரர் - வீராங்க னைகள் பேரணி செல்ல முயன்ற போது, தில்லி  காவல்துறை அவர்களை கைது செய்தது, கடந்த ஒருமாத காலமாக மல்யுத்த வீரர் - வீராங்க னைகள் போராடிய களத்தை அகற்றியதற்கு  உலக மல்யுத்த கூட்டமைப்பு கடும் கண்ட னத்தை தெரிவிக்கிறது. பாலியல் குற்றம்சாட் டப்பட்ட பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்கா தது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. தொடக்கத்தி லேயே அவர் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்காது. இதனால் பிரிஜ் பூஷண் மீது விரைவாக முழு மையான, பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. 

மல்யுத்த வீரர் - வீராங்கனைகளுக்கு உறுதுணையாக இருப்போம்

மேலும்,”மல்யுத்த வீரர் - வீராங்கனைகளை நேரில் சந்தித்து அவர்களுடைய பிரச்சனை யை முழுமையாக கேட்டறிந்து, சர்வதேச மல்  யுத்த கூட்டமைப்பு அவர்களுக்கு உறுதுணை யாக இருக்கும். இந்திய மல்யுத்த சம்மேள னத்தின் அடுத்த பொது கூட்டமைப்பு தேர்வு (தலைமை) குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம்  45 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகும் பொது கூட்டமைப்பு தேர்வை நிறைவு செய்யாவிட்டால் இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்படும். இந்திய மல்யுத்த  வீரர் - வீராங்கனைகள் எந்த நாட்டையும் சாராத  பொதுக் கொடியில் பங்கேற்கும் நிலை ஏற்படும்.  ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் மல்யுத்த வீரர் - வீராங்கனைகளின் போராட்டத்தால் தில்லி யில் நடைபெறவிருந்த ஆசிய சாம்பி யன்ஷிப் இடமாற்றம் செய்யப்பட்டதை நினை வூட்டுகிறோம்” எனவும் சர்வதேச கூட்டமைப்பு கூறியுள்ளது. சர்வதேச மல்யுத்த  கூட்டமைப்பு கண்டனம் தெரிவிக்கும் அளவில் மல்யுத்த வீரர், வீராங் கனைகளின் போராட்டம் உலகளவில் முக்கி யத்துவம் பெற்றுள்ளதால் மோடி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஓட்டம் பிடித்த அமைச்சர் மீனாட்சி லேகி

தில்லி பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த ஒன்றிய இணையமைச்சர் மீனாட்சி லேகி யிடம் பத்திரிகையாளர்கள் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதில ளிக்காமல் மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்தார். பத்திரிகையாளர்கள் விடாப்பிடி யாக துரத்தி கேள்வி கேட்க முயன்றும் பதி லளிக்காமல் காரில் ஏறிச் சென்றார்.
 

;