states

img

மோடிக்கு செலவு ரூ.30 கோடி

அம்பலப்படுத்தியது “குஜராத் சமாச்சார்”

அகமதாபாத், டிச. 2 - குஜராத்தில் 141 உயிர்களைப் பறித்த மோர்பி தொங்கு பால  விபத்து நடைபெற்ற இடத்தை  பார்வையிடவும் பாதிக்கப்பட்ட வர்களை பார்த்து ஆறுதல் கூறவும் பிரதமர் நரேந்திர மோடி வந்து சென்ற ஒரு நாள் செலவு ரூ.30 கோடி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் குரூரமான முரண் என்னவென்றால் சம்பந்தப்பட்ட தொங்கு பாலத்தை  பழுதுபார்ப்பதற்காக விடப்பட்டி ருந்த ஒப்பந்தத்தின் மொத்த தொகையே வெறும் ரூ. 2கோடி தான்.  குஜராத்தின் மோர்பி நகரில் அமைந்துள்ள தொங்கு பாலம் கடந்த அக்டோபர் 31அன்று அறுந்து விழுந்தது. இந்த கொடிய விபத்தில், பாலத்திலிருந்து மோர்பி நதியில் விழுந்து 55குழந்தைகள் உட்பட 141 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். 

இந்தப் பாலத்தைப் பழுது  பார்க்கும் பணி தனியார் நிறு வனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந் தது. அந்த நிறுவனம் இதுவரை இதுபோன்ற பணியில் எந்த அனு பவமும் இல்லாத நிறுவனம் என்பது  தெரியவந்தது.  அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த இந்த சம்பவம், நீண்ட ஆண்டுகளாக குஜராத்தில் நடைபெற்று வரும் பாஜக அரசின் மிக மோசமான நிர்வாகத்தை அப்பட்டமாக நாடு முழுவதும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. மோடி மாடல்  என்ற ‘குஜராத் மாடல்’  அறுந்து விழுந்தது. இந்த நிலையில் நவம்பர் 3 அன்று மோர்பிக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து  ஆறுதல் கூறினார். அவரது வருகைக் காக மோர்பி அரசு மருத்துவமனை அவசர அவசரமாக வண்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. புதிய சாலைகள்  அமைக்கப்பட்டன. குஜ ராத் ஆட்சியாளர்களின் இந்த செயல்பாடு நாடு முழுவதும் அதிர்ச்சி யையும் விமர்சனத்தையும் எழுப்பி யது. 

இந்த நிலையில், படாடோப மான மோடியின் இந்த வருகைக் காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வ ளவு என்று குஜராத்தைச் சேர்ந்த தகவல் உரிமை ஆர்வலர் சாகேத் கோகலே மூலம் தகவல் உரிமை சட்டத்தின்படி கிடைக்கப்பெற்ற விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. வெறும் 2 கோடி ரூபாய் பெறுமான மோர்பி தொங்கு பால  ஒப்பந்தப் பணியில் நடந்த முறை கேடு காரணமாக 141 பேரின் மர ணத்தை விசாரிக்க வந்த மோடி யின் வருகைக்கு குஜராத் அரசு  நிர்வாகம் ரூ.30 கோடியை செல வழித்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக குஜராத் சமாச்சார் என்ற நாளிதழ் விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், மோடியின் வருகைக்காக மோர்பி அரசு மருத்துவமனையை புதுப்பிக்கும் பணி, சுத்தப்படுத்தல், புதிய படுக்கை வசதிகள் மற்றும் வாட்டர் கூலர்  அமைத்த வகையில் ரூ.8 கோடி; ஒரே இரவில் புதிய சாலைகள் அமைத்த வகையில் ரூ.11 கோடி; மோடியை வரவேற்க  செலவு ரூ.3 கோடி; மோடியின் பாது காப்புக்கு ரூ.2.5 கோடி; மோடியின் வருகை நிகழ்வை மேலாண்மை செய்ய ரூ.2 கோடி; மிக முக்கியமாக புகைப்படங்கள் எடுக்க ரூ.50லட்சம் என 30 கோடி ரூபாய் அரசின் நிர்வா கத்தின் தரப்பில் செலவழிக்கப் பட்டுள்ளதாக அச்செய்தி விவரிக் கிறது. 

இதில் கொடுமை என்னவென் றால், மோர்பி பாலம் அறுந்துவிழுந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை முழுமையாக இன்னும் சென்றடையவில்லை என்பதுதான். ஒவ்வொரு குடும்பத்தி ற்கும் வெறும் 4லட்சம் ரூபாய் இழப்பீடு என அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகை மிகவும் குறைவு என்றும் தலா ரூ.10லட்சம் வழங்க லாம் என்றும் குஜராத் உயர்நீதி மன்றமே பரிந்துரை செய்தது. ஆனால் குஜராத் அரசு அதை ஏற்க வில்லை. இந்நிலையில், மோடி  வருகையின்போது வரவேற்பத ற்கும் நிகழ்ச்சியை மேலாண்மை செய்வதற்கும் செய்யப்பட்ட செலவு அளவிற்குக் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை சென்றடையவில்லை என சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குஜராத் சமாச்சாரில் இந்த விபரம் வெளியான உடனே ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி) அவசர அவசர மாக இந்தத் தகவல் தவறானது என்று  மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும்  குஜராத்தில் தேர்தல் நடக்கும் நிலை யில் இப்படிப்பட்ட தகவல்கள் வெளி யில் வராமல் முடக்கப்படுகின்றன என்றும் விமர்சகர்கள் குறிப்பி ட்டுள்ளனர். இந்த நிலையில் இதுதொடர்பாக விமர்சனம் வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “வெறும் 2கோடி ரூபாய்  பெறுமான மோர்பி பால பழுது பார்க்கும் பணி ஒப்பந்தத்தால் ஏற் பட்ட விபத்து இது; ஆனால் 30 கோடி  ரூபாய், பிரதமர் மோடியின் ஒரு நாள் பயணத்திற்காக செலவழிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள் ளன. குஜராத் பாஜக அரசின் முன்னு ரிமை எது, அலட்சியம் எது என்பதை இதைவிட வேறு எந்தத் தகவலும் தெளிவாக உணர்த்திவிட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

;