பாஜக மூத்த தலைவரான சத்யபால் மாலிக் ஜம்மு -காஷ்மீர் ஆளுநராக ஆகஸ்ட் 23, 2018 முதல் அக்டோபர் 30, 2019 வரை பணியாற்றி இருந் தார். ஆளுநராக இருந்த சமயத் தில் சத்யபால் மாலிக் இரண்டு கோப்புகளில் கையெழுத்து போடு வதற்காக பல கோடி ரூபாய் லஞ் சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளதாகவும், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தில்லி மற்றும் ஜம்மு -காஷ்மீரில் உள்ள 8 இடங்களில் கடந்த மாதம் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த சோதனையின் அடுத்த கட்டம் என்று கூறி வியாழனன்று சத்யபால் மாலிக்கின் தில்லி இல் லம் உட்பட அவருக்கு தொடர்பு டைய 30 இடங்களில் சிபிஐ அதி காரிகள் சோதனை நடத்தி வரு கின்றனர்.
லஞ்ச புகார் அளித்தவர் மீதே சோதனை
ஆளுநராக இருந்த சமயத்தில் சத்யபால் மாலிக் செனாப் ஆற்றில் இருந்து 624 மெகாவாட் நீர் மின் உற்பத்தி திட்டம், கிரு ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் ப்ராஜெக்ட் (ஹெப்) ஆகியவற்றில் ஒரு தனியார் நிறு வனத்திற்கு சுமார் 2,200 கோடி ரூபாய் மதிப்பிலான குடிமராமத்து பணிக்கான திட்டம் என இரண்டு திட்டத்திற்கான கோப்புகளுக்கு கையெழுத்திட்டார். இரண்டு கோப்புகளிலும் கையெழுத்து பெறுவதற்காக தனக்கு ரூ.300 கோடி வரை லஞ்சம் தர முயன்ற தாக சத்யபால் மாலிக்கே குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் நேர்மை யாக குற்றம்சாட்டிய நபர் மீதே மோடி அரசு சிபிஐயை ஏவிவிட்டது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பழிவாங்கல் நடவடிக்கை ஜம்மு -காஷ்மீர் மாநிலம் இரண் டாகப் பிரிக்கப்படுவதற்கு முன்பு, அதன் கடைசி ஆளுநராக இருந்த வர் சத்யபால் மாலிக். சட்டப்பிரிவு 370 ரத்து மற்றும் புல்வாமா தாக்கு தல் ஆகிய இரண்டு பெரிய நிகழ்வு களின்போது அம்மாநில ஆளுந ராக இருந்த சத்யபால் மாலிக், 2019-ஆம் ஆண்டு இறுதியில் கோவாவிற்கும், மேகாலயா வுக்கும் ஆளுநராக மாற்றப்பட் டார். 2022இல் அக்டோபரில் ஆளு நர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சத்யபால் மாலிக், அதன்பிறகு புல் வாமா தாக்குதலுக்கு மோடி அரசே காரணம் உள்ளிட்ட அதிர்ச்சித் தக வல், விவசாயப் போராட்டம் தொடர் பான ஆதரவு கருத்து, இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர் பான சர்ச்சை, மணிப்பூர் கலவரம் என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு மோடி மற்றும் அவரது ஒன்றிய பாஜக அரசை தொடர்ச்சி யாக விமர்சித்து வந்தார். இதனால் மோடி அரசு கடந்த மாதம் சிபிஐ சோதனை மூலம் மிரட்டியது. ஆனால் சத்யபால் மாலிக் மோடி அரசின் மிரட்ட லைக் கண்டு அஞ்சாமல் கடந்த மாதம், “இதுதான் நாட்டு மக்க ளுக்கு வாக்களிக்கும் கடைசி வாய்ப்பு. இந்திய மக்கள் உறுதி யாக ஜனநாயகத்தை காக்கும்படி சிந்தித்து வாக்களியுங்கள். மீண் டும் மோடி பிரதமரானால் இனி நாட்டில் தேர்தலே இருக்காது” என எச்சரிக்கை விடுத்தார். இந்த எச்சரிக்கைக்குப் பின்பு வியாழனன்று மீண்டும் சிபிஐ அவ ருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையை மேற்கொண்டுள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.