states

img

பழ வவ்வால்களில் நிபா வைரஸ் : ஐசிஎம்ஆர்

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த மாதம் மீண்டும்  நிபா வைரஸ் பரவல் ஏற்பட்டது. 6 பேருக்கு தொற்று பாதிப்பு  ஏற்பட்ட நிலையில், அவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் கோழிக்கோடு மாவட்டத்தை கட்டு பாட்டுப் பகுதியாக அறிவித்து கேரள அரசின் துரித  நடவடிக்கையில் களமிறங்கி நிபா வைரஸ் பரவலை  முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்  நிலையில்,  நிபா வைரஸ் பற்றி  ஆய்வை மேற்கொண்ட  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்)   அதன் முடிவுகளை கேரள அரசிடம் ஒப்படைத்தது. அறிக்கை குறித்து கேரள  சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில்,”பழ வவ்வால்களிடம் இருந்து  சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஐசிஎம்ஆர் ஆய்வு செய்ததில், வயநாடு மாவட்டத்தில் உள்ள வவ்வால்களில் நிபா வைரஸ் இருப்பது என உறுதிப்  படுத்தி உள்ளது.  இதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம் மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஐசிஎம்ஆர் எச்சரிக்கை தகவல் அளிக்கப் பட்டு உள்ளது என்றும் கூறினார்.