states

img

பகுத்தறிவை காவு வாங்கிய என்சிஇஆர்டி

புதுதில்லி, ஜுன் 11 - பொய்யான செய்திகள் மூலம் அரசியல் அறிவியல் பாடங்கள் சிதைக்கப்பட்டு பகுத்தறிவுப் பாதை யில் இருந்து விலகி, கல்வியை முற்றிலு மாக செயலிழக்கச் செய்துவிட்டது மோடி அரசு என்று கல்வி ஆராய்ச்சி  மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்(என்சிஇஆர்டி)உறுப்பினர் களும் அரசியல் அறிவியல் பாடத்திட்ட தயாரிப்பாளர்களுமான சுஹாஸ் பால்ஷிகர் மற்றும் யோகேந்திர யாதவ் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அனைத்து அரசியல் அறி வியல் பாடபுத்தகங்களில் இருந்தும் தங்கள் பெயரை நீக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  “கல்வி தேசியமயமாக்கல் என்ற பெயரில் நடைபெற்ற இந்த திருத்தத் தில் பகுத்தறிவு இல்லை; மாணவர்களுக் கான பாடத்திட்டத்தை வகுக்கும் குழு விலும் பகுத்தறிவு உள்ளவர்கள் இல்லை” என்று அவர்கள் சாடியுள்ள னர். இந்த திருத்தங்கள் மேற்கொள் வதற்கு முன் கருத்துக் கேட்போ தக வல்களோ தெரிவிக்கவில்லை. மற்ற கல்வியாளர்களோடு ஆலோசனை கேட்கப்பட்டு இருந்தல் நாங்கள் இந்த  முடிவை ஏற்றுக்கொண்டு இருக்க மாட்டோம் என்று, என்சிஇஆர்டி இயக்குனர் தினேஷ் சக்லானிற்கு கொடுத்த கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். கல்வியாளரும் ஆராய்ச்சி யாளருமான பால்ஷிகர் மற்றும் அர சியல் செயற்பாட்டாளரும் ஸ்வராஜ் இந்தியாவின் தலைவருமான யோகேந்திர யாதவ் ஆகிய இருவரும் 2005 தேசிய கல்வித் திட்டங்கள் அமைப் பின் அடிப்படையில் 9 முதல் 12 வகுப்பு  வரையிலான அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தின் முதன்மை ஆலோசகர் களாக இருந்தனர். 

“ஒவ்வொரு உரைக்கு பின்னும் ஒரு தர்க்கம் உள்ளது, பாடப் புத்த கங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த  நீக்கங்கள் அதிகாரத்தில் உள்ளவர் களை மகிழ்விப்பதைத் தவிர வேறு எந்த தர்க்கத்தையும் கொண்டிருக்க வில்லை.பாடப்புத்தகங்கள் மோசமான முறையில் சிதைக்கப்பட்டுவிட்டன. இது சமூகவியல் துறைகளில் படிக்கும் மாணவர்களின் விமர்சனம் மற்றும் கேள்வி கேட்கும் திறனை மட்டுப்படுத்தும்.இந்த புத்தகங்கள் அரசியல் அறிவியல் மாணவர்களுக்கு  அரசியல் கோட்பாடுகள் மற்றும் வர லாற்று ரீதியாக நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் குறித்து கற்பிக்க முற்றி லும் பயனற்றது” என்று அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர். கடந்த மாதம் என்சிஇஆர்டி புத்தகங்களில் இருந்து இந்து - முஸ்லீம் ஒற்றுமை குறித்து காந்தியின் பார்வை, அதைத் தொடர்ந்து இந்து தீவிரவாதிகளால் காந்தி படுகொலை செய்யப்பட்டது, ஆர்எஸ்எஸ் மீதான தடை, இந்தியா வின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத், விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை என்சிஇஆர்டி நீக்கியது. மேலும், பாஜக ஆட்சியில் குஜராத்தில் நடைபெற்ற வன்முறை குறித்தான பகுதிகளும் நீக்கப்பட்டு, ஆர்எஸ்எஸ்க்கு சாதகமான பாடத்திட்டமாக  மாற்றப்பட்டுள்ள செய லுக்கு நாடு முழுவதும் பெரும் கண்ட னங்கள் எழுந்த போது,  “பகுத்தறிவு நட வடிக்கையின் ஒரு பகுதியாக நிபு ணர்களின் ஆலோசனையோடு தான்  இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டன” என்று ஒன்றிய அரசு கூறி யது. தற்போது இந்த கடிதத்தின் வாயி லாக அது பொய் என நிரூபணம் ஆகி யுள்ளது. 

மேலும் அந்த கடிதத்தில், “பாடப்புத்தகங்கள் தயாரிப்பதில் தொடர்புடைய கல்வியாளர்கள் என்ற  முறையில் உண்மைகள் சிதைக்கப் பட்ட இந்த பாடப்புத்தகங்களில் எங்கள் பெயர் இடம்பெறுவதை நாங்கள் விரும்பவில்லை. பகுத்தறிவு முறையில் என்று சொல்லிக்கொள்ள கூடிய இந்த பகுத்தறிவற்ற செயலில் எங்களது கருத்து வேறுபாட்டை நாங்கள் வெளிப்படையாக தெரி வித்துக் கொள்கிறோம்” என்றும் இந்த பாடப்புத்தகங்களில் இருந்து தங்களின் பெயரை நீக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.