states

img

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக எம்.வி.கோவிந்தன் தேர்வு

புதுதில்லி, அக்.31- சிபிஎம் கேரள மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினராக மத்திய குழு கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தில்லியில் நடந்த சிபிஎம் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சிபிஎம் மாநில செயலாளராக இருந்த  கோடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி மாநில செயலாளராக எம்.வி.கோவிந்தன் தேர்வு செய்யப்பட்டார். மத்தியக் குழு உறுப்பினரான எம்.வி.கோவிந்தன், இரண்டாவது பினராயி அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார். மாநிலச் செயலாளர் பொறுப்பை ஏற்றதும் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார். கோடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்குப் பின், அரசியல் தலைமைக் குழுவில் அந்த இடம் காலியாக இருந்தது. அந்த இடத்திற்கு தற்போது எம்.வி.கோவிந்தன் தேர்வாகி உள்ளார்.