பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருப்ப வர் மகேந்திர சிங் சிசோடியா. காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்க பாஜக விலைக்கு வாங்கிய 22 எம்எல்ஏ-க்க ளில் மகேந்திர சிங் சிசோடியாவும் ஒருவர். சிசோடியா ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற சர்ச்சைக்குரிய பாலியல் வீடியோ ஒன்றை கடந்த செப்.7 அன்று தைனிக் குலாசா செய்தி நிறுவனத் தின் ஜாலம் சிங் என்ற பத்திரிகையாளர் வெளியிட்டார். மேலும் இந்த பாலியல் வீடியோ சம்பவத்தால் மகேந்திர சிங் சிசோ டியா வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை இழக்க லாம் என ஜாலம் சிங் தான் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டார். இந்நிலையில், பாஜக அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா பெயருடன் எப் படி வீடியோ வெளியிடலாம் என்று கூறி ஜாலம் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக் கத்துடன் தூண்டு தல்), 384 மற்றும் 385 (பணப்பறிப்பு), மற்றும் 469(போலி) ஆகியவற்றின் கீழ் 11 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள் ளது. தொடர்ந்து ஜாலம் சிங் செப்.13 அன்று கைது செய் யப்பட்டார். தைனிக் குலாசா நிறுவனம் விளக்கம் கேட்டதற்கு, புகாரின் அடைப்படையி லேயே கைது செய்துள்ளதாக காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் புகார் அளித்தவர்கள் ஆளும் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அரங்கேறி ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையில், ‘நியூஸ் லாண்ட்ரி’ மூலம் தற்போது வெளிச்சத் திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.