மோடி தனது தலைமையிலான ஆட்சியின் கீழ் பெரும் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஓயாமல் பீற்றிக் கொண்டிருக்கும் பின்னணியில், மோசடியான தரவுகள் பரப்பப்படுகின்றன. பேரழிவு தரும் மோடி பொருளாதாரத்தின் எதார்த்த நிலைகளில் சில, 2023 மார்ச் மாதம் மட்டுமே தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை காட்டும் ஏப்ரல் மாதம் வெளியான இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஇஎம்ஐ) தரவுகள். * வேலையின்மை விகிதம் 7.8 சதவீதமாக உயர்ந்திருந்தது. *தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 39.8 சதவீதமாக குறைந்தது *வேலைவாய்ப்பு விகிதம் 36.7 சதவீதமாக குறைந்தது