பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பில் ஒரு மாநிலத்தின் ஆளுநர் நியமிக்கப்படுவது என்பது, ஆளுநரின் அரசியலமைப்புச் சட்ட கடமைகளை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் அல்ல
திருவனந்தபுரம், நவ. 10 - கேரளத்தில் உள்ள அனைத்து பல் கலைக்கழகங்களிலும் ‘வேந்தர்’ பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்கிவிட்டு, கல்விப் புலத்தில் செயல்படும் அறி வார்ந்த பேராசிரியர்களை ‘வேந்தர் களாக’ நியமிக்க வழிசெய்யும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவருவது என கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கேரளம், தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களாக இருப்பவர்கள் - பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு எதிராக - ஒன்றிய பாஜக அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆகிய வற்றின் விருப்பங்களை நிறை வேற்றும் அடாவடிகளில் ஈடு பட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக கேரளத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான், ஒரு முழு மையான ஆர்எஸ்எஸ் அடிவருடி யாகவே மாறி, அங்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநா யக முன்னணி அரசுக்கு எதிராக ஒவ்வொரு நடவடிக்கையிலும் அராஜகமான முறையில் நடந்து கொண்டு வருகிறார்.
கேரளாவில் உள்ள பல்கலை கழகங்களில் கவுரவப் பொறுப்பு என்ற முறையில் ஆளுநர், ‘வேந்தர்’ என்ற பதவியினை வகித்து வருகிறார். இந்நிலையில் வேந்தர் என்ற முறையில், கேரளப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை பதவி நீக்கம் செய்ய முடிவெடுத்து, அவர்களை பதவியிலிருந்து வெளியேறுமாறு ஆளு நர் கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து பெரும் பிரச்சனை வெடித்தது. ஆளுநரின் இதுபோன்ற பல நட வடிக்கைகளை மாநில இடது ஜனநாயக முன்னணி அரசும் முதல்வர் பினராயி விஜயனும் மட்டுமின்றி, கேரளத்தின் எதிர்க்கட்சித் தலைவர்களும் கண்டித்த னர். எனினும் ஆளுநர் தனது முடிவுகளில் பிடிவாதமாக இருப்பது மட்டுமின்றி, முதல் வரின் அலுவலகமே ஒரு கடத்தல் மையமாக இருக்கிறது என்று மிகவும் தான் தோன்றித்தனமான முறையில்பேசினார். இத்தகைய நிகழ்ச்சிப் போக்குகளின் பின்னணியில், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் ஆளுநர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை; அரசியல் சட்டரீதியாக அப்படிப்பட்ட எந்த வழி காட்டுதலும் இல்லை என்ற கருத்து கேரள அரசியல் தலை வர்கள் மத்தியிலும், கல்வியா ளர்கள் மத்தியிலும் எழுந்தது.
அமைச்சரவைக் கூட்டம்
இந்தப் பின்னணியில் புத னன்று மாலை முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கூடிய கேரள அமைச்சரவை, மாநி லத்தின் 14 பல்கலைக்கழகங்களி லும் வேந்தர் பொறுப்பில் தலை சிறந்த கல்வியாளர்களை நியமி ப்பதற்கான அவசரச் சட்டத்தை கொண்டுவருவது என முடிவு செய்துள்ளது. இதற்கான அவ சரச் சட்டத்தை உருவாக்கி அதற்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரை அணுகுவது எனவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அரசு திட்டமிட்டுள்ள அவ சரச் சட்டமானது, பல்கலைக்கழக விதி முறைகளில் திருத்தங்களை முன்மொழி யும்; அவற்றில் ஒரு திருத்தமாக, அனைத்து 14 பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்தும் ஆளுநரை நீக்குவது என்ற திருத்தமும் அடங்கும். இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநி லத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேந்தர் என்ற பதவி தொடர்பான பல்க லைக் கழக விதிகளில் திருத்தம் மேற்கொள் வதே இந்த அவசரச் சட்டத்தின் நோக்கம் ஆகும். மாநிலத்தின் ஆளுநர் என்பவர், மாநிலத்தின் பல்கலைக்கழகங்களுக்கு தாமாகவே வேந்தர் என்ற பொறுப்புக்கு வருவார் என்று உள்ள பல்கலைக்கழக விதி களை இந்த வரைவு அவசரச் சட்டம் நீக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
நீதிபதி புஞ்ச்சி ஆணையத்தின் பரிந்து ரைகளின் அடிப்படையிலேயே கேரள அரசு இந்த முடிவினை மேற்கொண்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. நீதிபதி புஞ்ச்சி ஆணையம், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் ஒரு மாநிலத்தின் ஆளுநர் நியமிக்கப்படுவது என்பது, ஆளு நரின் அரசியலமைப்புச் சட்ட கடமைகளை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் அல்ல என தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், வேந்தர் என்ற பொறுப்பு ஆளுநரிட மிருந்து நீக்கப்படலாம் என்றும் ஆணை யம் குறிப்பிட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள கேரள அமைச்சரவை, மாநிலத்தில் உயர்கல்வித் துறைக்கு அரசு அதிகபட்ச முக்கியத்து வம் அளித்து வரும் பின்னணியில், பல்க லைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் கல்வியிற் சிறந்த அறிஞர்களை நியமிப் பது என முடிவுசெய்துள்ளதாக கூறியுள் ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களையும் கல்வியில் தலை சிறந்த மையங்களாக மாற்றுவதற்கான திட்டங்களை மாநில அரசு மேற்கொண் டுள்ளது; தொலைநோக்குப் பார்வை கொண்ட இந்த இலக்கினை எட்டுவதற்கு, வேந்தர் பொறுப்புகளில் கல்வியாளர் களை நியமிப்பது உதவும் எனவும் கேரள அமைச்சரவை கூறியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.பிந்து, மாநில அமைச்சரவை முன் மொழிகிற அவசரச் சட்டத்தில் கையெ ழுத்திடுவதன் மூலம் ஆளுநர் தனது அர சியலமைப்புச் சட்டக் கடமையை நிறை வேற்றுவார் என நம்புவதாக தெரிவித்தார். மாநில உயர்கல்வித்துறையில் மிகப் பெரும் மாற்றங்களை இந்த அவசரச் சட்டம் கொண்டுவரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எம்.வி.கோவிந்தன் பேட்டி
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன், கேரள பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரங்களை பாதுகாப்பதற்காக நாங் கள் எந்த எல்லைக்கும் செல்வோம் என குறிப்பிட்டார். இதுதொடர்பாக தமிழ்நாட்டின் ஆளும் திமுக தலைமையிலான அரசு, பல்க லைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை மாற்ற வகை செய்யும் இதே போன்ற நிர்வாக உத்தரவை பிறப்பித் ததை சுட்டிக்காட்டிய எம்.வி.கோவிந்தன், அதை ஒரு முன்னுதாரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பார்க்கிறது எனவும் குறிப்பிட்டார். கேரள அரசு கொண்டுவரும் அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்தால், அரசு அந்த மசோதாவை சட்ட மன்றத்தில் முன்மொழியக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.