states

img

நாங்கள் புடினுக்கு ஆதரவாக இருக்கிறோம்!

புதுதில்லி, மார்ச் 3- உக்ரைனுக்கு எதிராக, ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்யா மிகப்பெரிய தவறை செய்வதாக அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் கூப்பாடு போட்டு வருகின்றன.  ரஷ்யா மீது பொருளாதாரத் தடை மட்டுமன்றி கலாச்சார ரீதியான தடைகளையும் விதித்து வருகின்றனர். ஐக்கிய நாடுகள் அவையில், ரஷ்யா வுக்கு எதிராக அடுத்தடுத்து தீர்மா னங்களைக் கொண்டுவந்து, நெருக் கடி கொடுத்து வருகிறது. முக்கியமாக, தங்களுக்குள்ள கார்ப்பரேட் ஊட கங்கள் மூலம் 24 மணிநேரமும் ரஷ்யா வுக்கு எதிராக பொய்ச்செய்திகளைப் பரப்பி வருகின்றன. உலகம் முழு வதும் ரஷ்யாவுக்கு எதிரான வெறுப்பு மனநிலையை உருவாக்குவது அவர்களின் திட்டமாக உள்ளது. ஆனால், அமெரிக்காவின் பொய்ப் பிரச்சாரங்களையும் தாண்டி, தற்போது ரஷ்ய ஜனாதிபதி புடி னுக்கும் ஆதரவு பெருக ஆரம்பித் துள்ளது. அமெரிக்காவை கடுமை யாக சாடி பலரும் கருத்திட்டு வருகின்ற னர். என் ஆதரவு புடினுக்கு என்ற பொருள்படும் ‘ஐ ஸ்டேண்ட் வித் புதின்’ (‘#istandwithputin’) என்ற முழக்கத்தையும் டுவிட்டர் சமூகவலை தளத்தில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.  

இதுதொடர்பாக ஒருவர் போட் டுள்ள டுவீட்டில், “கடந்த 23 ஆண்டு களில் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோர் இணைந்து 9 இஸ்லாமிய நாடுகளில் ஊடுருவினர். 11 மில்லியன் முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். ஆனால் அவர் களை யாரும் ஊடுருவல்காரர்கள், தீவிரவாதிகள் என்று சொல்ல வில்லை” என்று அமெரிக்காவைச் சாடியுள்ளார். சன்னி ராஜ்புத் என்பவர் போட் டுள்ள டுவீட்டில், “ரஷ்யா இந்தியா வுக்கு பல வகையிலும் உதவியுள்ளது. 1957-இல் காஷ்மீர் விவகாரத்தில் வீட்டோவைப் பயன்படுத்தி நமக்கு உதவியது. 1961-இல் கோவாவை விடு விக்க உதவியது. 1962 மற்றும் 1971-லும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா வுக்கு ஆதரவாக இருந்தது” என்று பட்டியலிட்டுள்ளார். ராஜேஷ் என்பவர் போட்டுள்ள டுவீட்டில் “அமெரிக்காவுக்கு பண, அதிகார பசி அதிகம். ஆப்கானிஸ் தான், ஈராக், லிபியா, சிரியா என அது சூறையாடாத நாடுகள் இல்லை.

ஆனால் இன்று தனது நாட்டின் பாது காப்புக்காக ரஷ்யா போர் தொடுக் கும்போது மட்டும் ‘போரை நிறுத்து’ என்று அது பதறுகிறது!” என்று குறிப் பிட்டுள்ளார். இந்திய மாணவர் நவீனின் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுக்கு முந்தைய சோவியத் யூனியனும், இன்றைய ரஷ்யாவும் செய்துள்ள உதவிகளை எண்ணி, இந்தியர்கள் தங்களின் உளப்பூர்வ மான ஆதரவை ரஷ்யாவுக்கு வழங்கி வருகின்றனர்.