புதுதில்லி, நவ.12- 2022-ஆம் ஆண்டின் மே மாதத்தில், இந்தியாவின் பொருளாதாரம் 8.8 சத விகிதம் வளர்ச்சி காணும் என கணித்த ‘மூடிஸ்’ (Moody’s Investors Service) நிறுவனம், தொடர்ந்து நில வும் பொருளாதாரச் சூழல், பணவீகு கும் காரணமாக, அந்தக் கணிப்பை மாற்றி அமைத்துள்ளது. 2022 செப்டம்பர் மாதத்தில், இந்தி யப் பொருளாதாரம் 7.7 சதவிகிதம் வளர்ச்சி காணும் என முன்பு தெரி வித்திருந்த நிலையில், தற்போது 7 சத விகிதமே வளர்ச்சி இருக்கும் எனக் கூறி யுள்ளது. இதன்மூலம் மூடிஸ் இந்த ஆண்டுக்கு உள்ளேயே இரண்டாவது முறையாக கணிப்பை மாற்றியமைது தள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, 2022 உண்மையான ஜிடிபி வளர்ச்சி கணிப்புகள் 7.7 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுளு ளுன. உள்நாட்டில் நிலவும் அதீத பண வீக்கம், வட்டி விகிதங்கள் உயர்வு, சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை உள்ளிட்டவை இந்தியா வின் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளன. இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என மூடிஸ் தெரி வித்துள்ளது. மேலும், கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.5 சதவிகிதம் வளர்ச்சி கண்டது. ஆனால், 2023-ஆம் ஆண்டு இந்தியா வின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவிகி தமாகக் குறையும். 2024-ஆம் ஆண்டு வாக்கிலேயே வளர்ச்சி விகிதம் 6.4 சதவிகிதமாக உயரும் என்று மூடிஸ் குறிப்பிட்டுள்ளது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி ஆகி யனவும் இந்தியாவின் பொருளா தார வளர்ச்சிக் கணிப்பை மாற்றிய மைத்துள்ளன. இந்தியப் பொருளா தார வளர்ச்சிக் கணிப்பை உலக வங்கி (World Bank) 7.5 சதவிகிதத்தில் இருந்து 6.5 சதவிகிதமாகவும், சர்வ தேச நாணய நிதியம் (International Monetary Fund - IMF) 7.4 சதவிகி தத்தில் இருந்து 6.8 சதவிகிதமாகவும், ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) 7.5 சதவிகி தத்தில் இருந்து 7 சதவிகிதமாகவும் குறைத்துள்ளன என்பது குறிப்பி டத்தக்கது.