சிபிஎம் கடும் கண்டனம்
புதுதில்லி, டிச.4- குஜராத்தில் முதல் கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தொடர்ந்து அடுத்தக்கட்ட வாக்குப் பதிவு திங்க ளன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தேர்தலில் நடைபெற்ற பிரச்சாரங்க ளில், ஒன்றிய பாஜக அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா முஸ்லிம் மக்க ளுக்கு எதிராக விஷத்தை கக்கி உள்ளார்; பிரதமர் நரேந்திரமோடி சிறுபான்மை மக்கள் மீதும், எதிர்க்கட்சிகள் மீதும் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்; வழக்கம் போல தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சாடியுள்ளது. இதுதொடர்பாக, டிசம்பர் 4 ஞாயி றன்று வெளியாகியுள்ள கட்சியின் அதி காரப்பூர்வ ஏடான பீப்பிள்ஸ் டெமாக்ரசி யில் இடம்பெற்றுள்ள தலையங்கம் கடும் கண்டனக் கணைகளை விடுத்துள்ளது. விபரம் வருமாறு: குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்காக நடைபெற்று வரும் பிரச்சாரத்தின்போது பாஜக தலைவர்கள் தாங்கள் எப்படியெல் லாம் குஜராத்தை இந்துத்துவா சக்தி களின் ஆய்வுக்கூடமாக மாற்றினோம் என்றும், எப்படி ‘குஜராத் மாடல்’ என்று அறியப்படும் கார்ப்பரேட்டுகள்-இந்துத் துவாக் கூட்டணியை உருவாக்கினோம் என்றும் பகிரங்கமாகவே கூறி வருகிறார் கள்.
அமித்ஷாவின் வெறிப் பேச்சுக்கள்
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அமித்ஷா ஆற்றிவரும் உரைகளில் சில, குஜராத்திற்கு வெளியேயிருக்கின்ற மக்களை திடுக்கிட வைத்திருக்கிறது. எதார்த்த நிலையை எப்படியெல்லாம் தலைகீழாக மாற்றி ஆர்எஸ்எஸ்/பாஜக வெற்றி பெற்றது என்பதை அவரது உரை கள் பிரதிபலிக்கின்றன. 2002இல் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகள், முஸ்லீம்களுக் குப் பாடம் கற்பிப்பதற்காக மேற்கொள் ளப்பட்ட கலவரங்கள் தான் என்றும், அப் போது அங்கே முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியால் ‘அவர்கள்’ (முஸ் லிம்கள்) உறுதியாக அடக்கி வைக்கப் பட்டனர் என்றும் அதன்பின்னரே அங்கே ‘நிரந்தர அமைதி’ நிறுவப்பட்டது என்றும் அமித்ஷா பேசிவருகிறார். அதாவது, முஸ்லீம்களைப் பொறுத்த வரை அங்கே இருக்கும் அமைதி என்பது கல்லறையில் காணப்படும் அமைதியே யாகும். (1995க்கு முன்பிருந்த) முந்தைய காங் கிரஸ் அரசாங்கங்கள் மதவெறிக் கல வரங்கள் நடைபெறும்போது மென்மை யான போக்கைக் கடைப்பிடித்ததாகவும் அமித்ஷா குற்றம்சாட்டுகிறார். நாட்டில் சுதந்திரத்திற்குப்பின் சிறுபான்மையின ருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய இனப்படுகொலையை, “மறை முகமாக முஸ்லிம்களால் மேற்கொள் ளப்பட்ட கலவரங்கள் உறுதியாக நசுக்கப் பட்டதாக” தற்காலிக அடையாளமாக இப்போது சித்தரிக்கிறார்கள்.
இத்தகைய குரூரமான சிந்தனை இருப்பதன் விளைவாகத்தான், பில்கிஸ் பானு மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மீது பாலியல் வன்புணர்வுக் குற்றங்களையும் கொலைகளையும் மேற்கொண்ட கய வர்களை அவர்களின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னரே, தண்டனைக் காலத்தை தள்ளுபடி செய்து விடுதலை செய்வதற்கும் இட்டுச் சென்றது. குஜ ராத் அரசாங்கத்தின் கூற்றுப்படி, அமித்ஷா வினுடைய உள்துறை அமைச்சகம்தான் இந்தக் குற்றவாளிகளின் தண்டனைக் காலத்தைத் தள்ளுபடி செய்திட ஒப்பு தல் அளித்ததாம்.
மோடியின் விஷமப்பேச்சு
இதேபோன்றே மோடி தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் பேசுகையில், எதிர்க்கட்சிகள் தேசத்திற்கு எதிரான சக்திகளுக்கு அல்லது குஜராத்திற்கு எதி ரான சக்திகளுக்கு ஆதரவாக இருக்கின் றன என்று கூறிவருகிறார். அதாவது, எதிர்க்கட்சிகள் பயங்கரவாதத்தை முகத்துதி செய்வதாக, வாக்கு வங்கி யாகப் பார்ப்பதாக காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் மீது மோடி தாக்குதல் தொடுத்திருக்கிறார். இவரது கண்ணோட் டத்தின்படி, எதிர்க்கட்சியினர் மதச்சார் பின்மையைப் பாதுகாப்பதற்காகவும், சிறுபான்மையினர் உரிமைகளைப் பாது காப்பதற்காகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எல்லாம் பயங்கரவா தத்திற்கு எதிரான மென்மையான போக்கு என்பதே! எனவே இத்தகைய போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் தேச விரோதிகள் என்பதே! பாஜக ஆட்சியாளர்களின் இத்த கைய மதவெறிக் கண்ணோட்டத்தின் கார ணமாகத்தான், குஜராத்தில் முஸ்லிம் களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படு கொலைகளுக்காக நீதி கோரி நடவ டிக்கை எடுத்த டீஸ்டா செதல்வாத் மற்றும் காவல்துறை முன்னாள் தலைவர் ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டார்கள். மோடியை அம்பலப்படுத்துகிறது தற்போதைய பிரச்சாரம் இப்போது நடைபெற்றுவரும் தேர் தல் பிரச்சாரம், மோடி முதலமைச்சராக இருந்த சமயத்தில் குஜராத் அரசாங்கத் தின் அணுகுமுறை எப்படி இருந்தது என் பதைப் பிரதிபலிக்கிறது. அதாவது, முஸ் லிம்களுடன் பாகிஸ்தானையும், பயங்கர வாதத்தையும் ஒன்றிணைத்தும், மதச்சார் பற்ற கட்சிகள் முஸ்லிம் சிறுபான்மை யினரை முகத்துதி செய்வதன்மூலம் பயங்கரவாதத்திற்கு உடந்தையாக இருந்தன என்கிற முறையிலும் இவர்களு டைய பிரச்சாரங்கள் அமைந்திருக்கின் றன. இவர்களின் இத்தகைய கதையை எவராவது விமர்சனம் செய்தால் அவர் கள் தேசவிரோதிகள் என்றும், குஜராத் விரோதிகள் என்றும் முத்திரை குத்தப்படு வார்கள்.
கள்ளக்கூட்டணி
இதேபோன்றே ‘கார்ப்பரேட்டுகள்-மதவெறியர்கள் கள்ளக்கூட்டணி’ ஆட்சி தலைதூக்கியதிலும் குஜராத்தின் பாதை தன்னிகரற்றது. நாட்டிலுள்ள ஒட்டு மொத்த கார்ப்பரேட்டுகளும், முதலாளித் துவ வர்க்கமும் மோடி மற்றும் பாஜக வின் பின்னால் உறுதியுடன் அணிவகுத் திருக்கின்றன. பெரும் வர்த்தகர்கள் மற் றும் வணிக நிறுவனங்களுக்கு நாட்டின் சொத்துக்கள் மற்றும் வளங்கள் வாரி வழங்கப்பட்டிருக்கக்கூடிய அதே சம யத்தில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கு சொற்ப அளவி லேயே ஊதியங்கள் வழங்கப்படுகின் றன. குஜராத் மாநிலத்தின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் உயர்மட்ட அளவிற் கும், கீழ்மட்ட அளவிற்கும் இடையே யுள்ள வேறுபாடு அங்கே நிலவும் சமூ கத்தின் அவல நிலையை அப்பட்டமாகக் காட்டுகிறது. விலைவாசி உயர்வு, வேலையில் லாத் திண்டாட்டம், கல்வி மற்றும் சுகா தார வசதிகள் பற்றாக்குறை காரணமாக ஏழை மக்கள் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப் பட்ட பிரிவினர் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது என்பது தேர்தல் பிரச்சாரத் தின்போது மேலெழுந்து வந்தன. எனி னும், இவ்வாறு மக்கள் மத்தியில் காணப் படும் கோபத்தை மழுங்கடிப்பதற்காக, அங்கே மக்கள் மத்தியில் ஆழமாகப் புரையோடிப்போயுள்ள மதவாதச் சிந்த னைகள் பயன்படுத்தப்படுகின்றன.
முஸ்லிம் மக்களின் துயரநிலை
இத்தகைய மதவெறிப் பிரச்சா ரத்தின் இலக்கு, தனியே ஒதுக்குப்புற மாக, மிகவும் மோசமான நிலைமைகளு டன் வாழ்ந்துவரும் முஸ்லீம்களே! குஜ ராத் நகரங்களில், முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் அடிப்படைக் குடிமை வசதி கள் எதுவுமின்றி மிகவும் பரிதாபகரமான நிலையில் இருந்து வருவதையும் முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஆழமான முறையில் பிளவு இருப்பதையும் தெளிவாகப் பார்க்க முடியும். பாஜக, தங்களுடைய இந்துத் துவா வெறிப் பிரச்சாரம் மூலமும் தேர்த லுக்குப் பிறகு மேலும் பல சலுகைகள் அளிக்கப்படும் என்கிற வாக்குறுதிகள் மூலமும் வாக்காளர்களை வென்றுவிட லாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கி றது.
விஷத்தை உமிழும் இவர்களின் மத வெறிப் பிரச்சாரத்தைத் தடுத்திட எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது இப்போது இயல்பாகிப் போனது. ஏனெனில் இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல்களின் போது தேர்தல் நடத்தை விதிகளைத் திரும்பத் திரும்ப மீறிய நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா மீது நடவடிக்கை எடுப்ப தில் தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்து விட்டது. குஜராத்தில் நடைபெற்றுவரும் தேர் தல் பிரச்சாரம் சம்பந்தமாக, ஓர் ஓய்வு பெற்ற மூத்த குடிமை அதிகாரி, இ.ஏ.எஸ். ஷர்மா அவர்கள், அமித்ஷாவின் பேச்சுக் கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி யிருக்கின்றன என்றும் இந்தியத் தண்ட னைச் சட்டத்தின் பிரிவுகளின்கீழ் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி யுள்ளார்; எனவே அமித்ஷாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதி இருக்கிறார். இதற்கு தேர்தல் ஆணை யத்திடமிருந்து இதுபற்றி எந்தப் பதி லும் இல்லை.
தமிழில் தொகுப்பு: ச.வீரமணி