புதுதில்லி, பிப். 20 - இந்தியாவின் முதல் நிலை பணக்கார ராக இருந்த கவுதம் அதானி-யின் சொத்து மதிப்பு, 50 பில்லியன் டாலர்களுக்கும் கீழாக சரிந்தது. ‘புளூம் பெர்க்’ பில்லியனர்கள் அறிக்கை யின் படி, கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பானது 49.1 பில்லியன் டாலர்களாக வும் (சுமார் ரூ. 4 லட்சத்து 6 ஆயிரம் கோடி யாகவும்), ‘போர்ப்ஸ்’ ரியல் டைம் அறிக்கை யின் படி, 47.9 பில்லியன் டாலர்களாகவும் (சுமார் ரூ. 3 லட்சத்து 96 ஆயிரம் கோடியாக வும்)குறைந்துள்ளது. மேலும், அவர் உலகப் பணக்காரர்கள் வரிசையில் 25-ஆவது இடத்திற்குத் தள்ளப் பட்டுள்ளார். கடந்த ஜனவரி 24 அன்று ஹிண்டன் 155 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் (சுமார் 14 லட்சம் கோடி ரூபாய்) இந்தியா மற்றும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்கார ராகவும், உலகின் 3-ஆவது பணக்காரராக வும் அதானி இருந்தார்.
ஆனால், ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ வெளியிட்ட 106 பக்கங்களில், 32 ஆயிரம் வார்த்தைகளைக் கொண்ட ஆய்வறிக்கை, கடந்த 3 வாரங் களில் அதானி சாம்ராஜ்யத்தையே சரித்துப் போட்டுவிட்டது. கடந்த ஜனவரி 24 முதல் தற்போது வரை அதானி குழுமம் 125 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளது. அதானி குழுமங்களின் சந்தை மதிப்பு 19 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், அதில் சுமார் 10 லட்சத்து 50 ஆயிரம் கோடியை இழந்துள்ளது. ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கை வெளியான பிறகு, அதானி குழு மத்தின் சுமார் 55 சதவிகிதம் அளவிற்கான சந்தை மதிப்பை இழந்துள்ளது. கவுதம் அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் 2022 டிசம்பரில் ரூ. 12 லட்சத்து 40 ஆயிரத்து 353 கோடி யாக இருந்த நிலையில், தற்போது அது சுமார் ரூ. 4 லட்சம் கோடிக்கும் கீழே சரிந்துள்ளது. அதானி குழுமம் அதன் 52 வார உச்சத்தை எட்டுவதற்கு, அந்த குழுமத்தைச் சேர்ந்த அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட பங்கு களின் மதிப்பு 410 சதவிகிதம் வரையில் அதிகரிக்க வேண்டும். ஆனால், அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் ஒரு பங்குக்கு 606.45 ரூபாய் என்ற விலையிலும், அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 925.10 ரூபாய் என்ற விலை யிலும் வர்த்தகமாகி வருகின்றன. அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி எண்டர்பிரை சஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது முறையே, 873.90 ரூபாய் மற்றும் 1623.65 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகின்றது.