states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாட  சிபிஎம் அழைப்பு

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன்  5 வியாழனன்று கட்சி ஊழி யர்கள், கட்சி அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் மரக்கன்றுகளை நட்டு,  பொது இடங்களைச் சுத்தம் செய்ய முன்வர வேண்டும் எனவும், பயனுள்ள  வகையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்ய வேண்  டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கேரள மாநிலக்குழு அழைப்பு விடுத்துள்ளது.   இதுகுறித்து சிபிஎம் கேரள மாநில  செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில்,”சுற்றுச்சூழல் தினத்தன்று, நக ரங்கள், சுற்றுலா மையங்கள், அலுவல கங்கள், பள்ளிகள், உயர்கல்வி நிறுவ னங்கள் போன்றவற்றில் சுற்றுச்சூழல் தினத்தின் ஒரு பகுதியாக, கட்சி ஊழி யர்கள் சுத்தம் செய்யும் நடவடிக்கை களை வழிநடத்த வேண்டும். இந்த  ஆண்டு, உலக சுற்றுச்சூழல் தினம்  “பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடி”  என்ற முழக்கத்துடன் கொண்டாடப்படு கிறது. இது உலகைப் பற்றிக் கொண்டி ருக்கும் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடி வுக்குக் கொண்டுவருவதில் கவனம்  செலுத்துகிறது. பிளாஸ்டிக் மாசுபாட்  டின் விளைவுகள் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும், மறு சுழற்சியை சாத்தியமாக்கவும் கட்சி கிளைகள் விழிப்புணர்வு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். கேரள அரசு சுற்றுச்சூழலை சுத்தம் செய்வதற்கும், பிளாஸ்டிக்கை அகற்ற நடவடிக்கை எடுப்பதற்கும் ஒரு சிறப்பு இயக்கத்தையே உருவாக்கியுள்ளது. இதுதொடர்பாக அரசாங்கத்தின் செயல்  பாடுகளை ஆதரிப்பதும் முக்கியம். உல கில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செய்  யப்படும் அனைத்து தலையீடுகளையும் ஆதரிப்பதன் மூலம் முன்னேற முடியும்”  என அதில் கூறப்பட்டுள்ளது.  திருவனந்தபுரம்

கொச்சியில் எம்எஸ்சி கப்பல் விபத்தால் பாதிப்பு ஒரு லட்சம் மீனவர்களுக்கு நிதி உதவி அறிவிப்பு

' மீன்பிடித்தலை கடுமையாக பாதித்த எம்எஸ்சி-3 கப்பல் விபத் தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் என 1,05,518 பேருக்கு நிதி உதவிக்கான உத்தரவை கேரள அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் திரு வனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மற்  றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் 78,498 மீனவ குடும்பங்கள் மற்றும் 27,020 மீன்பிடி தொடர்பான தொழிலாளர் குடும்பங்கள் நிதி உதவி பெறுவார்கள். மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இடைக்கால நிவாரணமாக ரூ.1000 மற்றும் 6 கிலோ இலவச ரேசன் அரிசி  வழங்கப்படும். இந்த நிதி மாநில பேரி டர் மீட்பு நிதியிலிருந்து ஒதுக்கப்படும். இதற்காக ரூ.10 கோடியே 55 லட்சத்து 18 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு  மற்றும் பொது விநியோகத் துறை உட னடியாக 1,05,518 குடும்பங்களுக்கு 6 கிலோ இலவச ரேசன் அரிசி வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கேரள கடற்கரையிலிருந்து 14.6 கடல்  மைல் தொலைவில் அரபிக் கடலில்  மே 25 அன்று எம்எஸ்சி -3 கப்பல்  விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து திரு வனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மற்  றும் எர்ணாகுளம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்  தது. இந்த விபத்தை மாநில அளவி லான பேரிடராக அரசாங்கம் அறிவித்தி ருந்தது.