states

img

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஓராண்டு நிறைவு

புதுதில்லி, ஜன.16- இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ஆம் தேதி தொடங்கியது. புனே சீரம் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிதான் ஒரே ஆயுதம் என்பதால், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படு கின்றன. வீடு வீடாகச் சென்றும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதுவரை 156.76 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக் கிறது. சனிக்கிழமை நிலவரப்படி , நாடு முழுவதும் மொத்தம் 156.37 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளது. வயது வந்தோரில் 70 சதவீதத்திற்கும் அதிக மானோருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 65 கோடி.  ஒமைக்ரான் வைரஸ் பரவிவரும் நிலையில் இந்தியா வில்  2022 ஜனவரி 3 அன்று,15 முதல் 17 வயதுக்குட்பட்ட வர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

 மேலும், தடுப்பூசி இயக்கத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சிறப்பு தபால் தலையை ஒன்றிய அரசு ஞாயிறன்று வெளியிட்டது. இதற்கிடையே, முன்னெச்சரிக்கை டோஸ்கள் எனப்படும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் ஜனவரி 10-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிது. முதல்கட்டமாக சுகாதாரம் மற்றும் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த பிரிவில் இது வரை 43.19 லட்சத்திற்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப் பட்டுள்ளன. 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 3,38,50,912 முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி இயக்கத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு வருக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். எங்கள் தடுப்பூசி திட்டம் கொரோனாவிற்கு எதிரான போராட்டத் திற்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளது. இது உயிர்களைக் காப்பாற்றவும், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வழிவகுத்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தடுப்பூசி பணி ஒரு வருடம் நிறைவு குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ட்விட்டர் பதிவில், உலகிலேயே மிகவும் வெற்றிகரமான தடுப்பூசி இயக்கம் இந்தியாவில்தான் நடைபெறுகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் இது ஒரு மைல்கல் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.