இந்திய தென்னை வளர்ச்சி வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள் ளது. அந்த அறிக்கையில்,”2023-24ஆம் ஆண்டு மதிப்பீடுகளின்படி 726 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்து கர்நாடக மாநிலம் முதலிடம் பிடித்துள் ளது. இதில் இரண்டாவது இடத்தில் 578 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்து தமிழ்நாடு உள்ளது. 564 கோடி தேங்காய் உற்பத்தி செய்து கேரளா 3ஆவது இடத்திற்கு இறங்கியுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கேரள மாநிலம் தேங்காய் உற்பத்தி யில் முதலிடத்தை பிடித்து வந்தது. ஆனால் கடந்த 2022-2023ஆம் ஆண்டில் கேரளாவை (563 கோடி) விட கர்நாடகா (595 கோடி) 32 கோடி தேங்காய்களை கூடு தலாக உற்பத்தி செய்து முதலிடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.