states

சட்டப்பேரவைத் தேர்தல் மேகாலயா, நாகாலாந்தில் இன்று வாக்குப்பதிவு

ஈரோட்டில் இன்று வாக்குப்பதிவு

கோகிமா, பிப்.26- வடகிழக்கு மாநிலங்களான மேகா லயா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு ஜனவரி 3-வது வாரத்தில் அறிவிக்கப்பட்டது. இரு மாநிலங்களின் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் சனிக்கிழமை நிறைவு பெற்ற நிலையில், பிப்.27 (திங்க ளன்று) வாக்குப்பதிவு நடைபெறு கிறது.

மேகாலயா

“கிழக்கின் ஸ்காட்லாந்து” என அழைக்கப்படும் மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 5 முனைப் போட்டி உருவாகியுள்ளது. ஆளும் தேசிய மக்கள் கட்சி 57 தொகுதி களிலும், காங்கிரஸ், பாஜக தலா 60  தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 56 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 46 தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளன. மேலும் மக்கள் குரல் கட்சி 18 தொகுதிகளிலும், மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி11 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக முன்னணி 9 தொகுதிகளிலும், ஒன்றி ரண்டு தொகுதிகளில் சிறிய கட்சிகள்  உட்பட 44 சுயேச்சை வேட்பாளர் களும் தேர்தல் களத்தில் உள்ளனர்.  36 பெண்கள் உள்பட மொத்தம் 369 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேகாலயாவில் மொத்த வாக்கா ளர்கள் எண்ணிக்கை 21,75,236. இவர் களில் ஆண்கள் 10.99 லட்சம், பெண்கள் 10.68 லட்சம் உள்ளனர். 81,000 வாக்கா ளர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

59 தொகுதிகளில் மட்டும்...

பிப்ரவரி 20-ஆம் தேதி அன்று சோஹியோங் சட்டமன்றத் தொகுதி யில் போட்டியிடும் ஐக்கிய ஜனநாய கக் கட்சி வேட்பாளர் ஹெச். டோங்கு பர் ராய் லிங்டோ இறந்ததை அடுத்து அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள் ளது. இதனால் 59 தொகுதிகளுக்கு 3,419  வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மேகாலயாவில் 443  கிமீ தூரம் உள்ள இந்தியா - வங்க தேச சர்வதேச எல்லை மூடப்பட்டுள்ளது.

நாகாலாந்து

60 தொகுதிகளை கொண்ட நாகா லாந்தில் ஆளும் தேசியவாத ஜன நாயக முற்போக்கு கட்சி (என்டிபி) பாஜகவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் (என்டிபி - 40, பாஜக -20) போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளிலும், என்பிஎப் (நாகா) 22 தொகுதிகளிலும் போட்டி யிடுகின்றன. மேலும் லோக் ஜன்சக்தி 15 தொகுதிகளிலும், என்பிபி, தேசிய வாத காங்கிரஸ் தலா 12 தொகுதி களிலும், ஆர்பிபி - 9, ஐக்கிய ஜனதா தளம் 7, ஆர்ஜேடி 3 தொகுதிகளிலும், சிபிஐ ஒரு தொகுதிகளிலும் போட்டி யிடுகிறது. நாகாலாந்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13,17,632.  இவர்களில் ஆண்கள் 6,61,489. பெண்கள் 6,56,143 உள்ளனர். 60 தொகுதிகளில் களமிறங்கும் 183 வேட்பாளர்களில் 4 பேர் மட்டுமே பெண்கள் ஆவர். நாகாலாந்து மாநி லத்தில் இதுவரை 14 தேர்தல்கள் நடை பெற்றுள்ளன. ஒரு தேர்தலில் கூட பெண் எம்.எல்.ஏ. சட்டசபைக்குள் நுழைந் தது இல்லை என்ற அவலம் உள்ளது.