states

img

கடந்தாண்டை விட சுமார் 25 மடங்கு அதிகரிப்பு ரூ. 603 கோடி நிகர லாபமீட்டி எல்ஐசி சாதனை

புதுதில்லி, ஆக. 17 - இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்  எனப்படும் நாட்டின் முன்னணி காப்பீட்டு  நிறுவனமான ‘எல்ஐசி’ (Life Insurance Corporation of India - LIC) 2022 ஏப்ரல் முதல் ஜூன் வரை யிலான காலாண்டில் ரூ. 602 கோடியே 78 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டின் இதே மூன்றாண்டு காலத்தில்,  எல்ஐசி பங்குச் சந்தைகளுக்குத் தாக்கல்  செய்த அறிக்கைகளின் படி எல்ஐசியின் நிகர லாபம் ரூ. 24 கோடியே 36 லட்சமாக இருந்தது. அதனோடு ஒப்பிடுகையில், 2022- 23 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகரலாபம் சுமார் 25 மடங்கு அதிகரித்துள்ளது. பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி, தனது கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில் இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளது.

சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டில் பிரீமியம் மூலமான வரு வாய் ரூ. 81 ஆயிரத்து 721 கோடியாக  இருந்த நிலையில், நடப்பு 2022-23 நிதி யாண்டின் முதல் காலாண்டில் பிரீமியம் மூலமான வருவாய் ரூ. 98 ஆயி ரத்து 352 கோடியாக உயர்ந்துள்ளது. இது 20.35 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2021-22 நிதியாண்டின் முழு ஆண்டு சந்தைப் பங்கான 63.25 சதவிகிதத்து டன் ஒப்பிடும்போது, 2023ஆம் நிதி யாண்டின் முதல் காலாண்டில் முதல் ஆண்டு பிரீமியம் வருமானம் 65.42 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டின்  ஜூன் காலாண்டில் எல்.ஐ.சி. நிறுவனம் ரூ. 36 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 60 சதவிகிதம் அதிகமாகும். 2022 ஜூன் 30ஆம் தேதி நில வரப்படி, எல்ஐசி நிர்வகிக்கும் சொத்து  மதிப்பு  ரூ. 41 லட்சத்து 02 ஆயிரம் கோடி யாக உயர்ந்துள்ளது. இது 2021-22  நிதி யாண்டின் முதல் காலாண்டில் 38  லட்சத்து 13 ஆயிரம் கோடி என்ற அள வில் இருந்தது. தற்போது 7.57 சத விகிதம் சொத்து மதிப்பு அதிகரித்து உள்ளது. கடந்த மார்ச் மாதத்தோடு முடிந்த  2021-22 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் எல்ஐசி ரூ. 2 ஆயிரத்து 371  கோடி லாபம் ஈட்டியது குறிப்பிடத் தக்கது.

;