அம்பானி அதானி பெரும் முதலாளிக்கு
அடகு தான் போயிடிச்சே பொது துறைகள்
அடகு தான் போயிடிச்சே-அந்த சண்டாளப் பாவி பாசிச மோடி வசம்
சிக்கிக் கிட்டு தவிக்கிறதே நாடு-இப்ப சிக்கிக் கிட்டு தவிக்கிறதே
(அம்பானி...)
வேலையின்மையும் விலைவாசி உயர்வும்
றெக்கைகட்டி பறக்கிறதே-விண்ணில் ஏறி ரெக்கைகட்டி பறக்கிறதே
காவிகளின் மதவெறியால் வன்கொடுமை
வன்முறைகள் தலைவிரித்தாடுகிறதே
வன்முறைகள் தலைவிரித்தாடுகிறதே
(அம்பானி...)
வெறுப்பு அரசியலும் வேண்டாத சட்டங்களும்
இமயத்தை எட்டுகிறதே இமயமலை உச்சியில ஏறுகிறதே
அயோத்தியில் கோயில்கட்டி ஸ்ரீரங்கத்தில் கும்பிட்டிட்டு
ஏமாற்று வேசம் போடுற
நாட்டை நாசகரம் ஆக்கி தொலைக்கிற
(அம்பானி...)
பொய்யான வாக்குறுதி வாயால சொல்லிச் சொல்லி
சுட்டவடை போதும் போய்யா-மோடி
நீ சுட்டவடை போதும் போய்யா
பத்தாண்டு சாதனையில் பட்டினிதான் முன்னிருக்கு
வேறென்ன மிச்சமிருக்கு-மோடி
உனக்கு சவடாலு பேச்சு எதற்கு
(அம்பானி...)
- எம்.ரமேஷ்
தியாகி என்வி கலைக்குழு
தஞ்சை.