states

img

உலக பணக்காரர் பட்டியலில் 38-ஆவது இடத்திற்குப் போனார் அதானி!

புதுதில்லி, பிப். 27 - உலகின் 3-ஆவது பணக்கார ராக இருந்த கவுதம் அதானி, ஒரே  மாதத்தில் 38-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார். ‘போர்ப்ஸ்’ ரியல் டைம் பில்லி யனர்ஸ் அறிக்கையின் படி, கவுதம்  அதானியின் நிகர சொத்து மதிப்பு,  திங்களன்று மாலை (பிப்ரவரி 27) 33.4 பில்லியன் அமெரிக்க டாலர் களாக (சுமார் 2 லட்சத்து 73 ஆயி ரத்து 880 கோடி ரூபாயாக)  சரிந்துள்ளது. ஆர்எஸ்எஸ் - பாஜக-வின்  செல்லப்பிள்ளையும், பெரும்பணக் காரருமான கவுதம் அதானி, கடந்த  2014-இல் உலக பணக்காரர் வரிசை யில் 609-ஆவது இடத்தில் இருந்தார். அதன்பிறகு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய  பாஜக அரசு பதவிக்கு வந்த கடந்த  8 ஆண்டுகளில், 2022-இல் உலகின் 2-ஆவது பெரும்பணக்காரர் என்ற இடத்திற்கு முன்னேறினார். வெறும் 8 பில்லியன் டாலர் சொத்து  மதிப்புடன் இருந்த அவர், 140 பில்லி யன் டாலர் என்ற அசுர வளர்ச்சி  கண்டார். சற்று ஏற்ற இறக்கங்களு டன், உலகின் 3-ஆவது இடத்தில் தொடர்ந்து நீடித்து வந்தார். ஆனால், கடந்த ஜனவரி 24 அன்று, அமெரிக்காவைச் சேர்ந்த  ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ வெளியிட்ட 106 பக்கங்களில், 32 ஆயிரம் வார்த்தைகளைக் கொண்ட ஆய்வறிக்கை, அதானியின் இந்த வளர்ச்சியின் பின்னணியில் மிகப்பெரிய மோசடித்தனம் இருப்பதாக அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது

அதானி குழுமமானது, ரூ. 17  லட்சத்து 80 ஆயிரம் கோடி அள விற்கு பங்குச் சந்தை முறைகேடு செய்திருக்கிறது; அதானி குழுமம், தனது குடும்ப உறவினர்கள் மூலம் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளது; அதிகப்படியான வரிச் சலுகை கொண்ட வெளி நாடுகளில் பணத்தை முறையற்ற வகையில் முதலீடு செய்து அமெரிக்கப் பத்திரம் மற்றும் இந்தி யர் அல்லாத வர்த்தகப் பத்திரம் மூலம் நிறுவனத்தில் ஷார்ட்  பொசிஷன் (Short Position) வைத்துள்ளது; தங்கள் நிறு வனங்களின் பங்கு மதிப்பை  மோசடியாக உயர்த்திக்காட்டி யுள்ளது” என்று குற்றச்சாட்டுக் களை அடுக்கியது. உரிய ஆதாரங்களையும் வெளியிட்டு அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்தியது.  இதனால், அதானி சாம்ராஜ் யம் சீட்டுக்கட்டு சரிவது போல சரிய ஆரம்பித்தது. அந்த சரிவு இப்போது வரை நிற்கவில்லை.  இதனால், 2022 டிசம்பரில் ரூ. 12 லட்சத்து 40 ஆயிரத்து 353  கோடியாக இருந்த கவுதம் அதானி யின் தனிப்பட்ட சொத்து மதிப்பு,  2023 ஜனவரிக்குப் பிந்தைய ஒரே மாதத்தில் தற்போது ரூ. 2 லட்சத்து 73 ஆயிரத்து 880 கோடி என்ற அளவிற்கு அதலபாதாளத்தில் விழுந்துள்ளது. உலகின் பெரும்பணக்காரர் வரிசையிலும் 3-ஆவது இடத்திலிருந்து 38 ஆவது  இடத்திற்கு அதானி தள்ளப் பட்டுள்ளார்.