புதுதில்லி, அக்.5- இந்தியாவில் பதுங்கி சர்வதேச அளவில் கைவரிசை காட்டும் சைபர் கிரைம் கும்பலை பிடிக்க பன்னாட்டு புலனாய்வு அமைப்பு களுடன் இணைந்து சிபிஐ நாடு முழுவதும் 115 இடங்களில் சோதனை நடத்தியது. இதில், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் மோசடி களை அரங்கேற்றும் சைபர் கிரைம் கும்பல் சர்வதேச புலனாய்வு அமைப்புகளுக்கு கடும் சவாலாக உள்ளன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களும் வித விதமான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் பதுங்கியிருந்து சர்வதேச அள வில் கைவரிசை காட்டும் பன்னாட்டு சைபர் கும்பலுக்கு எதிராக, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் தனியார் புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சிபிஐ ‘ஆபரேஷன் சக்ரா’ என்ற பெயரில், தில்லி, பஞ்சாப், ராஜஸ்தான், அசாம், கர்நாடகா, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ளூர் காவல்துறை ஒத்துழைப்புடன் சோதனை நடத்தியது.
சுமார் 115 இடங்களில் சோத னை நடந்து வருவதாக தெரிவித்த சிபிஐ இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 1.8 கோடி ரூபாய் ரொக்கம், 1.5 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள் ளது. புனே மற்றும் அகமதாபாத்தில் செயல்பட்ட 2 கால்செண்டர்களும் சிபிஐயால் கண்டுபிடிக்கப்பட்டது. பலரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதோடு கைதா னவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் எந்தெந்த நாடு களில் பதுங்கி சர்வதேச அளவில் சைபர் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதை கண்டறிந்து அதன் அடிப்படையில் சர்வதேச கூட்டு நடவடிக்கையை தொடர சிபிஐ முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் சைபர் குற்ற ங்கள் மூலம் உலக அளவில் நாள் தோறும் 1 லட்சம் பேருக்கு 9000 பேர் வீதம் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் ஆண்டு தோறும் 71.1 மில்லியன் பேர் சைபர் குற்றங்களுக்கு ஆளாகின்றனர். அவர்கள் இழக்கும் தொகையில் சுமார் 318 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.