states

கடன்களை முதலாளிகள் ஏப்பம் விடுவதற்காகவே ஒரு புதிய வங்கி

மேலும் ரூ.2லட்சம் கோடி வராக்கடனை தள்ளுபடி செய்ய மோடி திட்டம்

புதுதில்லி, செப். 17 - பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் மெகா கோடீஸ்வரர்கள் இந்தியப் பொதுத்துறை வங்கி களில் வாங்கி குவித்துக் கொண்டு, திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்துள்ள வராக்கடன்கள்  ரூ. 6லட்சம் கோடிக்கும் அதிகமாக தள்ளுபடி செய்துள்ள மோடி அரசு, மேலும் ரூ.2லட்சம் கோடியை தள்ளு படி செய்வதற்காக புதியதொரு மோச டித் திட்டத்தை அறிவித்துள்ளது. அதற்கு ‘கெட்ட வங்கி’ (Bad Bank) என்று சில ஊடகங்கள் பெயரே வைத்துவிட்டன. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமன், செப்டம்பர் 16 வியா ழனன்று நடைபெற்ற ஒன்றிய அர சின் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, தேசிய சொத்து மறுசீர மைப்பு கம்பெனி லிமிடெட் (NARCL)  என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கு வதாகவும் அதற்கு முதற்கட்டமாக ரூ.30,600 கோடி நிதி அளிப்பதாகவும் இதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வங்கியின் நோக்கம் என்னவென்றால், பொதுத் துறை வங்கிகளில் பெரும் முத லாளிகள் மற்றும் மெகா கோடீஸ்வர ர்கள் வாங்கிவிட்டு திரும்பச் செலுத்தாமல் ஏமாற்றி மோசடி செய்துள்ள வராக்கடன்களை, வங்கி களின் இருப்பு நிலை கணக்குப் பட்டிய லிலிருந்து முற்றாக நீக்கும் நோக்கத்துடன், அரசுத் தரப்பிலி ருந்து வங்கிகளுக்கு உத்தர வாதம் தருவதே ஆகும். அந்த அடிப் படையில் தனியார் பெருமுதலா ளிகளும் மெகா கோடீஸ்வரர்களும் வாங்கியுள்ள கடனுக்காக அரசாங்கமே நிதி மற்றும் பங்கு பத்திரங்கள் அளிப்பதன் மூலமாக வங்கிகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது; இதன் மூலம், மேற்படி முதலாளிகளும் கோடீஸ்வரர்களும் வாங்கிய கடன்களை எந்த விதத்திலும் திரும்பச் செலுத்த வேண்டியதில்லை என்பதை மோடி அரசு உத்தரவாதப்படுத்தியுள்ளது.  இந்த பெரும் கொள்ளையை, வர லாறு காணாத சூறையாடலை -  ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தனது வார்த்தை ஜாலங் களால் மறைக்க முயன்றிருக்கிறார். ஏற்கெனவே வராக்கடன்களை, “செயல்படாத சொத்து” என்று முத லாளித்துவ ஊதுகுழல்கள் வர்ணிக் கின்றன.

இப்போது, இத்தகைய வராக்கடன்களால் வங்கிகளின் இருப்புநிலை கணக்குப் பட்டி யல்களில் (Balance Sheet) “அழுத்தம்” ஏற்படுவதாக நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். இந்த அழுத்தத்தை சரி செய்வதற்காக அவர், கடனை திரும்பச் செலுத்தாத பெருமுதலாளிகளிடமிருந்து அதிரடி யாக வசூல் செய்வதற்கு பதிலாக, புதி தாக ஒரு நிதி வங்கியை உருவாக்கி,  அதற்கு அரசாங்கமே நிதி கொடுத்து, அந்த வங்கி மேற்படி ஏமாற்றுப் பேர் வழிகளின் கணக்கு களை சரி செய்வதற்கு பொதுத் துறை வங்கிகளுக்கு முதற்கட்ட மாக 15சதவீதம் நிதியை அளித்து  சமாளிக்கும் என்று அறிவித்திருக் கிறார். அதனால்தான் அந்த வங்கிக்கு கெட்ட வங்கி என்று சில ஊடகங்களும் பொருளாதார வல்லுநர்களும் பெயரிட்டிருக்கிறார்கள். இதன்மூலம் பொதுத்துறை வங்கி களை “சுத்தப்படுத்தும்” தங்களது அர சாங்கத்தின் நடவடிக்கை  மாபெரும் வெற்றி பெற்றுவிட்டதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிதற்றி யிருக்கிறார்.  

உண்மை என்னவென்றால் மேலும் ரூ.2லட்சம் கோடி அளவிற்கு இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளுக்கு வர வேண்டிய கடன் தொகையை முற்றாக கபளீ கரம் செய்வதற்கு பெருமுதலாளி களுக்கும் மெகா கோடீஸ்வரர் களுக்கும் இதன்மூலம் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான். இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கின்படி பெரும் கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்ப  வராத கடன்தொகை, மோடியின் கடந்த ஏழு ஆண்டுகால ஆட்சி யில் மட்டும் 365 சதவீதம் அதிகரித்துள் ளது. 2013-14 ஆம் நிதியாண்டில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் வராக் கடனாக இருந்தது சுமார் ரூ.5லட்சம் கோடி ஆகும். அது 2014-15 முதல் 2019-20 வரையிலான 6 ஆண்டு கால மோடி ஆட்சியில் மட்டும் ரூ.18.28லட்சம் கோடியாக மிகப் பெரும் அளவிற்கு அதிகரித்துள் ளது. இந்த பெரும் கடன் தொகை யில், கடந்த ஆறு ஆண்டு காலத்தில் மட்டும் ரூ.6,83,388 கோடி,  பொதுத்துறை வங்கிகளால் பெரு முதலாளிகள் மற்றும் கோடீஸ்வரர் களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள் ளது.

இந்தப் பின்னணியில்தான் மேலும் ரூ.2லட்சம் கோடியை எப்படி தள்ளுபடி செய்வது என்ற தீவிர சிந்தனையின் அடிப்படையின் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஒன்றிய நிதி அமைச்சகமும், மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்ச ரவையும் இந்த புதிய திட்டத்தை உரு வாக்கி அறிவித்துள்ளன. இது பொதுச் சொத்தை, இந்திய மக்களின் சேமிப்பை ஈவிரக்கமின்றி சூறையாடி, ஒட்டுமொத்தமாக தங்களது கூட்டுக் களவாணி முதலாளிகளின் கரங்களில் முற்றாக ஒப்படைப்பது என்கிற மோடி அரசின்  அடுத்தகட்ட நடவடிக்கை ஆகும்.

;