states

img

திரிபுரா மாநில புதிய முதல்வராக மாணிக் சகா தேர்வு 

திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் குமார் தேப் இன்று ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய முதல்வராக மாணிக் சகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. முதல்வராக பிப்லப் குமார் தேப் பதவி வகித்து வந்தார். அங்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் குமாா் தேப் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் சனிக்கிழமை அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து புதிய முதல்வராக மாணிக் சகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.