states

img

புதுச்சேரி: ரூ.12.26 லட்சம் மின் கட்டணம் - அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர்

புதுச்சேரியில், இரண்டு மாதத்தின் மின் கட்டணம் ரூ.12.26 லட்சம் வந்ததால், வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.
புதுச்சேரியில் கடந்த இரண்டு மாதங்களாக தனியார்மயத்தைக் கண்டித்து மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரண்டு மாதங்களாக மின் பயன்பாட்டு குறித்து அளவீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில், புதுச்சேரி முழுவதும் இரண்டு மாதங்களுக்கான மின் கட்டண ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், முத்தியால்பேட்டையில் உள்ள சரவணன் என்பவரின் வீட்டிற்கு ரூ.12.26 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன், மின்சாரத்துறை அதிகாரிகளை நாடியபோது, மின் கணக்கெடுப்பில் ஒரு சைபரை தவறுதலாகச் சேர்த்ததால், இந்த விபரீதம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. 
 

;