சென்னை,ஜூலை 22- சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெள்ளியன்று (ஜூலை 22) வெளி யிடப்பட்டது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விழுக்காடு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் நடந்த 12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர் களுக்கு கடந்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கால தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறாத நிலையில் கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வு வாரியம் விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வந்த நிலையில் வெள்ளியன்று (ஜூலை 22) காலை 10 மணிக்கு திடீ ரென்று வெளியிடப்பட்டது.
அதன் படி, 12 ஆம் வகுப்பு தேர்வை எழுதிய 14,35,366 மாணவர்களில் 13,30,662 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேர்ச்சி 92.71 விழுக்காடாகும். இதில் 94. 54 விழுக்காடு மாணவிகளும் 91.25 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சிபெற்றிருக்கின்றனர். இந்த தேர்வில் 98.82 விழுக்காடு தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தை பிடித்துள்ளது. 98.16 விழுக்காடு தேர்ச்சி பெற்ற பெங்களூரு மண்டலம் இரண்டாவது இடத்தையும், 97.79 விழுக்காடு தேர்ச்சி யடைந்திருக்கும் சென்னை மண்டலம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள் ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி 7 விழுக்காடு குறைந்திருக் கிறது
பத்தாம் வகுப்பு
அதேபோல் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு காலை 10.40 மணிக்கு அறிவிக்கப்பட்டது. 20,93,978 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 19,76,668 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். ஒட்டுமொத்தமாக 94.40 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 64,098 மாண வர்கள் 95 விழுக்காட்டிற்கும் அதிக மாக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த தேர்வில் 99.68 விழுக்காடு தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்ட லம் முதலிடத்தை பிடித்துள்ளது. 99.22 விழுக்காடு தேர்ச்சி பெற்ற பெங்களூரு மண்டலம் இரண்டாவது இடத்தையும், 98.97 விழுக்காடு தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் மூன்றா வது இடத்தையும் பிடித்துள்ளது.