சென்னை, அக்.8- முதல்வர் மு.க.ஸ்டாலினை ஞாயி றன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நேரில் சந்தித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆகி யோர் அக்டோபர் 8 ஞாயிறன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுரு கன், உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி மற்றும் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங் கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
முதல்வருக்கு பாராட்டு
இச்சந்திப்பின் போது, மகளிர் உரிமைத் தொகை வழங்கி மகளிரின் ஊதியமில்லா உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் நடவடிக்கைக்கும், விடுபட்டு போனவர்களுக்கு மீண்டும் பெறுவதற்கு வாய்ப்பளித்தமைக்கும் முதலமைச்ச ருக்கு மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்தியா கூட்டணி சிறப்பு மாநாடு
இந்தியா கூட்டணி சார்பில் அகில இந்திய அளவில் 5 முக்கிய நகரங் களில் மக்கள் பிரச்சனைகளை வலி யுறுத்தி பெருந்திரள் மாநாடுகள் நடத்திட சிபிஎம் அகில இந்திய பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தி யுள்ளார். அந்த அடிப்படையில் சென்னை யில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாட்டை இந்தியா கூட்டணி சார்பில் நடத்துவது பற்றி ஆலோசித்தனர்.
கோரிக்கை மனு
மேலும் இச்சந்திப்பின் போது, தமிழக மக்களின் பல்வேறு முக்கியக் கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என வலி யுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். அதன் அம்சங்கள் வருமாறு;
1 வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீதான வன்முறை வழக்கில் 31 ஆண்டு களாக நடந்து வரும் நீண்ட, நெடிய சட்டப்போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பி னை அமல்படுத்துவது, குறிப்பாக வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு - அரசு வேலை - நிரந்தர வீடு, மற்றும் வாச்சாத்தி கிராமத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை உள்ளிட்டவற்றை அரசுத் தரப்பில் நிறைவேற்றிட வேண்டும். (விரிவான விபரம் : பக்கம் 5)
2ஒன்றிய பாஜக அரசின் பொருளா தாரக் கொள்கைகளின் காரணமாக கடுமையான தொழில் நெருக்கடி களைச் சந்தித்து வரும் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாப்பதற்கு மின்சார வாரியத்தின் நிலை கட்டண உயர்வு மற்றும் பீக் ஹவர் கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்ப பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3நீண்ட காலமாக சிறையில் அடைக் கப்பட்டுள்ள 36 முஸ்லீம் சிறை வாசிகளை விடுதலை செய்திட வேண்டும்.
4 அரசுப் போக்குவரத்துக் கழகங் களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப் படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5 மேலும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது, சரண்விடுப்பு வழங்குவது; சத்துணவு ஊழியர் களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் - ஓய்வூதியம் வழங்குவது; தொகுப்பூதி யம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது; அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது; 6 இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது; காலை சிற்று ண்டித் திட்டம் உள்ளிட்டு அரசின் நலத் திட்டங்கள் அரசு உதவிபெறும் பள்ளி களுக்கு வழங்குவது;
7 அரசாணை எண் 354 இன் படி மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது, கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது;
8 மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டு 5 மாதங்கள் ஆகியும் இதுவரை வழங்கப் படாமல் இருக்கும் நிலுவைத் தொகை யினை வழங்குவது, ஒப்பந்த ஊழியர் களை பணி நிரந்தரம் செய்வது, கேங் மேன் பணியாளர்களை நியமிப்பது;
9திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி மாணவர் சின்னத்துரை, தங்கை சந்திரா செல்வி ஆகி யோரின் பள்ளிப்படிப்பை தொடரவும், அக்குடும்பத்திற்கு அரசு வீடும், வேலை யும் வழங்குவது, சந்திரா செல்விக்கு தமிழக அரசின் வீர தீர சாகச செயல் களுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்குவது ஆகிய - கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்ட மேற்கண்ட கோரிக்கைகளை கவனமுடன் கேட்ட றிந்த முதலமைச்சர், இவை குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்தார்.