states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

டாடா குழுமத்தின் விமான நிறுவனங் களான விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியாவை 2024- ஆம் ஆண்டு மார்ச் மாத த்திற்குள் ஒருங்கி ணைப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

வேலூர் சிஎம்சி. மருத்து வக் கல்லூரியில் ராகிங் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 7 மாண வர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னி ட்டு வரும் டிசம்பர் 6-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர்  விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

தில்லியில் செவ்வா யன்று காலை 9 மணியள வில் காற்றின் தரக் குறி யீடு 358 என்ற நிலையில் மிகவும் மோசமான பிரி வில் இருந்ததாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரி யம் தகவல்வெளியிட் டது. 

ஆப்பிரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதால் குரங்கம்மை நோய் இனி எம்-பாக்ஸ்  (M-POX) என்று அழைக்கப் படும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பவ ளப்பாறையான ஆஸ்தி ரேலியாவின் “கிரேட் பேரியர்” பவளப்பாறை பகுதி பருவநிலை மாற்ற த்தால் மிகுந்த ஆபத்தில் இருப்பதாகவும், இத னால் அப்பகுதி ஆபத்தில்  உள்ள உலக பாரம்பரிய  தளங்களின் பட்டியலில்  இணைக்க வேண்டும் என யுனெஸ்கோவிற்கு ஐநா பரிந்துரைத்துள்ளது.

ஹவாயில் உள்ள உலகின்  மிகப்பெரிய எரிமலை யான “மவுனா லோவா”  எரிமலை 40 ஆண்டு களுக்கு வெடிக்கத் தொடங்கியது. 4,169 மீ உயரம் கொண்ட இந்த எரிமலை கடைசியாக 1984-ஆம் ஆண்டு வெடித்தது.

டெண்டர் முறைகேடு, சொத்துக்குவிப்பு வழக்கு களை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்ந்த வழக்குகளில் புத னன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கு கிறது.

சென்னை மாதாவரத்தில் இயங்கி வந்த மதரசா பள்ளியில் குழந்தைகளை சித்ரவதை செய்யப்படு வதாக புகார் வந்த நிலையில்,  குழந்தைகள் நல  அமைப்பு அதிரடி சோதனை நடத்தியது. சோத னையில்  பீகாரைச் சேர்ந்த 5 முதல் 12 வயது வரை யுள்ள 12 குழந்தைகள் காயங்களுடன் மீட்கப்பட்ட னர். மதரசா பள்ளியை நடத்திவந்த பீகாரைச் சேர்ந்த அக்தர் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

உலகச் செய்திகள்

ராணுவத்திற்கான ஆயுதங்கள், செலவுகள் மற்றும் புதிய உத்திகள் ஆகியவை பற்றி ஜப்பான் அரசு தொடர்ந்து பேசி வருகிறது. இத்தகைய கொள்கைகளுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவினாலும் அரசு தனது பாதையில் இருந்து விலகவில்லை. 2027 ஆம் ஆண்டுக்குள் ராணுவத்திற்கான நிதிஒதுக்கீடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு விழுக்காடாகத் தொட்டு விட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள். இதை அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்தார்.

பெரு மற்றும் சிலி ஆகிய இரு நாடுகளுக்கிடையில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. இருநாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள சிலியின் சாண்டியாகோ நகருக்கு பெருவின் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில்லோ வந்துள்ளார். சிலிக்குச் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய காஸ்டில்லோ, “அரசியல்-தூதரக விவகாரங்களில் உச்சபட்ச அதிகாரம் கொண்டதாக பெரு-சிலி இருநாடுகள் அமைச்சரவை இருக்கிறது. முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.

கியூபாவில் நகர்மன்றங்களுக்கான தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. 11 ஆயிரத்து 502 பேர் பிரதிநிதிகளாகத் தேர்வாகியுள்ளனர். அவர்களில் 43 விழுக்காட்டினர் பெண்களாவர். சுமார் 13 விழுக்காட்டினர் 35 வயதிற்குக் கீழ் உள்ள இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களில் 68 விழுக்காட்டினர் வாக்களித்தனர். போதிய வாக்குகளை யாரும் பெறாததால் 925 இடங்களில் மட்டும் மறு தேர்தல் நடக்கிறது.

;