பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள மன்சூர்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் குப் பாபூர். இங்கு “நேஹா பப்ளிக் ஸ்கூல்” என்ற தனியார் பள்ளியை நடத்தி வருபவர் திராப்தி தியாகி ஆவார். இவர் 7 வயதேயா கும்2-ஆம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவனை மதத் தைக் குறிப்பிட்டு விமர்சித்ததுடன், இந்து மாணவர்களை வைத்து, அந்த முஸ் லிம் சிறுவனை கன்னத்தில் மாறி மாறி அறையச்செய்த வீடியோ, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடுமுழுவதும் கடும் கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டு, ஆசிரியை திராப்தி தியாகி மீது இந்திய தண்ட னைச் சட்டத்தின் 323, 504 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்தனர். எனினும் அவரைக் கைது செய்யவில்லை. இந்நிலையில், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் புதனன்று விசாரணைக்கு எடுத்த நிலையில், விசாரணையின் நிலை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் பெற்றோர் பாதுகாப்பிற்காக எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முசாபர்நகர் காவல் துறை கண்காணிப்பாளருக்கும், இந்த விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 25ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.